Translate

வெள்ளி, 11 ஜூலை, 2025


 வியாபாரக்குறள் - 6/15

அதிகாரம் - Overhead Expenses

மிகைப் படுத்தும் விரயமது குறைப்பின் 
நிறைப்படுத்தும் தன் இலை 

நீங்கள் நிறுவனத்தின் தேவையற்ற செலவுகளை குறைக்கும் போது அதுவே நம் நிறுவனத்தின் பல தேவைகளை பூர்த்தி செய்யும்.


 வியாபாரக்குறள் - 5/15

அதிகாரம் - Expenses - செலவு

தாங்காது செய்யும் செலவு எப்போதும் 
தாங்காது தன் நிலை 

வரவினை சரியாக சேமிக்காமலும் திட்டமிடாமலும் செய்யும் செலவு எப்போதும் உறுதியான நிலையில் இருக்க முடியாது.


 வியாபாரக்குறள் -4/15

அதிகாரம் - Income - வரவு

வருவது எல்லாம் வரவல்ல வந்ததில் 
மறைந்தே இருக்கும் சேமிப்பு 

வரவு என்பது நம்முடைய முதலீடு செய்தலின் பலன். ஏற்கனவே வரவை அறிந்துதான் செலவு செய்கிறோம் என்றாலும் வரும் வரவு முழுமையாக செலவுக்காக அல்ல !

வியாழன், 10 ஜூலை, 2025


 வியாபாரக்குறள் -3/15

அதிகாரம் - கடன்

வாங்க வாங்க இன்பம் அது 
வந்தால் தருவதே துன்பம்

கடன் ஆடம்பரத்திற்காக இல்லாமல் நம்முடைய முன்னேற்றத்திற்கு அவசியமானதாக இருக்குமானால் அதுவே நன்மை தரும்.


 வியாபாரக்குறள் -2/15

அதிகாரம் - சொத்து - Asset 

நகர்வதும் நகராததும் சொத்து எதுவாயினும் 
அது தருவதே சிறப்பு 

சொத்துக்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதற்கு நாம் செலவு செய்வதற்கு மாறாக அதன் மூலம் இலாபம் பெறக்கூடிய வகையில் இருக்க வேண்டும்.


 வியாபாரக்குறள் -1/15

அதிகாரம் - நிதி மேலாண்மை - Capital

முதல் இட்டார் ஒருமுறை அறிந்து 
அதனால் இட்டார் மறுமுறை.

ஒரு முறை உங்களுடைய முதலீடு சரியான முறையில் இருக்குமாயின் அதன் மூலம் பலன் அடைந்து மீண்டும் முதலீடு செய்து அதிக இலாபம் பெறலாம்.

புதன், 9 ஜூலை, 2025


 நமது வியாபாரத்தில் ஆயிரம் ராஜாக்கள் உருவாகலாம். ஆனால் அவர்களது ராஜ்யம் என்பது நமது மக்கள் ஆகிய வாடிக்கையாளர்கள் தான். நமக்கான வாடிக்கையாளர்களை நாம் பெற்றிருக்கும் வரை நமக்கான ராஜ்யம் நமக்கு இருக்கும்.


போட்டியாளர்களின் ராஜ்யத்தை வேவு பார்ப்பதற்கு மாறாக உங்களது வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவை என்பதைச் சரியாகச் செய்து விட்டால் நமக்கான மகுடத்தை அவர்கள் சூட்டுவார்கள்.

பிசினஸ் கிங் மேக்கர் 

                    "வியாபாரத்தில் சதுரங்க வேட்டை !" 

ராஜாவை மட்டும் காப்பாற்ற நம் நகர்வுகளை தீர்மானிப்பது இல்லை, ராஜ்ஜியமும் முக்கியம், ராஜ்யத்தில் இருப்பவர்களும் முக்கியம். ராஜ்ஜியம் காப்பாற்றப்பட்டால் மட்டுமே ராஜாவுக்கு அங்கு இடம்.