Translate

புதன், 20 செப்டம்பர், 2023

தொழில் மலர் - 9

அனைவரும் பெற விரும்பும் வெற்றிக்கு பின் ஒரு சிறந்த ஆக்கப்பூர்வமான சிந்தனை இருக்கும்.

அதற்கு துணைபுரியும் வகையில் உங்களுக்காக உருவாக்கப்பட்ட பிரத்தியேக தொழில் மலர். magazine 9



Contact: 9940600860
For more info: www.myelite.in

தொழில் மலர் - 8

பொதுவாக உலக நிகழ்வுகளை நேரடியாக கண்காணிக்கும் நாம் அந்த நிகழ்வுகளின் மூலம் ஏற்படும் விளைவுகளை அறிந்து கொள்ள தவறி விடுகிறோம்.

அனைத்து விதமான தொழில் வல்லுநர்களுக்கும் வெற்றியை கொடுக்கும் வகையிலான சிறப்பான தொழில் மலர். magazine 8



Contact: 9940600860
For more info: www.myelite.in

தொழில் மலர் - 7

உங்களது வெற்றியை தீர்மானிக்கும் காரணிகளில் முதல் கட்டமாக இருப்பது நமக்கான திட்டங்களும் அதற்கான செயல்களும். அதற்கும் முன்னதாக ஒவ்வொரு தொழில் நிர்வாகிக்கும் தேவைபடுவது அவர்களால் எந்த அளவிற்கு உயரங்களை தொட வேண்டும் என்ற இலக்குகள்.

உங்களது இலக்குகளை இன்னும் தெளிவாக திட்டமிட உதவும் வகையில் எலைட் தொழில் மலர். முற்றிலும் வியாபார வளர்ச்சிக்கான தனித்துவமான மலர். Magazine 7



Contact: 9940600860
For more info: www.myelite.in

செவ்வாய், 19 செப்டம்பர், 2023

தொழில் மலர் - 6

உங்களது வளர்ச்சிக்கான பாதையும் அதற்கான வழிமுறையும் எந்த அளவிற்கு தெளிவாக இருக்கிறதோ அதே அளவிற்கு உறுதியாக வெற்றியை பெற முடியும்.

அதற்கான விளக்கங்களை கொண்ட முழுமையான எலைட் தொழில் மலர் . முழுமையாக படித்து பயன் பெறுங்கள். Magazine 6



Contact: 9940600860
For more info: www.myelite.in

செவ்வாய், 12 செப்டம்பர், 2023

ஒரு நிறுவனத்தின் தலைவராக உங்களது நேரம் முறையாக பாதுகாக்கப்பட்டால் ?





நேரமே போதவில்லை ? இது தான் வளரும் நிறுவன தலைவர்களின் இன்றைய நிலை! அப்படியானால் வளர்ந்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு இந்த பிரச்சனை இல்லையா ? நிச்சயமாக இல்லை! ஏனென்றால் ஒரு நிறுவனத் தலைவர் நேரம் போதவில்லை என்று சொன்னால் அவரால் சிறந்த நிறுவனத்தை உருவாக்க முடியாது? உங்களது கனவு மற்றும் இலட்சியமாக இருக்கும் உங்களது தொழில் சார்ந்த விஷயங்களுக்கு நேரம் போதவில்லை எனில் அதில் இரண்டு காரணங்கள் இருக்கலாம்.
1 - அதிகப்படியான வேலைப்பளு மற்றும் பொறுப்புகளை சுமப்பது.
2 - தவறான முறையில் தினசரி நடவடிக்கைகள் மற்றும் நேரத்தை கையாளுவது இந்த இரண்டும் ஆபத்துதான் ? ஏனென்றால் முதல் காரணத்தில் என்னதான் நீங்கள் திறமைசாலியாக இருந்தாலும் போதிய நேரம் இல்லாமல் சிறந்த நிர்வாகத்தை அளிக்க முடியாது. மற்றும் நீங்களும் சோர்வடைந்து சலிப்படையக்கூடும். இரண்டாவது காரணத்தில் நீங்கள் தான் பொறுப்பாளர் என்பதால் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள், எனவே உங்களால் ஏற்படும் தாமதமும், அதனால் ஏற்படும் இழப்புகளும் உங்களிடம் நேரடியாக கூற மாட்டார்கள். இதனால் தவறுகள் அதிகமாகும். சரி எப்படித்தான் சரி செய்வது? நேரம் சரியாகத்தான் இருக்கிறது, உங்களைத்தான் சரி செய்ய வேண்டும்.
1. தற்போதைய உங்களது நிலையை புரிந்து கொண்டு மனதார ஒப்புக் கொள்ளுங்கள்..
2. குறைந்தது 7 நாட்களுக்காவது தினசரி நீங்கள் செய்யும் காரியங்களை குறித்து வையுங்கள், இதற்கு தங்களுடைய போனில் நிறைய தொழில் நுட்பங்கள் இருக்கிறது. அதனை பயன்படுத்தலாம்.
3.தினமும் இரவு மற்றும் 7 நாட்களின் முடிவில் ஒட்டு மொத்த வாரத்தின் நடவடிக்கைகளையும் சோதனை செய்து அவற்றில் உங்களது முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் நடவடிக்கைகளை நீக்குங்கள். உங்களது நேரம் எப்போது வரை முழுமையாக உங்களுடையதாக உங்களுக்காக தங்களின் முன்னேற்றத்திற்காக இருக்கிறதோ அதுவரை நீங்கள் முன்னேற்றத்தை மட்டுமே காண்பீர்கள். உங்களது நேரத்தையும் நிறுவனத்தின் நேரத்தையும் சிறப்பாக மேம்படுத்த இன்றே தொடர்பு கொள்ளுங்கள்..
எங்களது you tube தளத்தினை பார்க்க https://www.youtube.com/watch?v=8ox0fGGNUnk
எங்களது வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெற https://chat.whatsapp.com/FwwbiaHLjyc27mXDbobDbd
எங்களது இணையதளத்தை பார்க்க www.myelite.in
நேரடியாக எங்களை தொடர்பு கொள்ள +919940600860

Delegation in Business






மஹாபாரதத்தில் கிருஷ்ணரிடம் சஞ்சயன் கேட்டார், கிருஷ்ணா சூதாட்டத்தை நீங்கள் நினைத்திருந்தால் பாண்டவர்களை காப்பாற்றி இருக்கலாமே? ஏன் இப்படி கைவிட்டு விட்டீர்கள் ?

துரியோதனன் புத்திசாலி அதனால் தான், தான் ஆடாமல் சகுனியை வைத்து ஆடினான், அதே போல் தருமனும் என்னை வைத்து ஆடி இருந்தால் இப்படி நாட்டையும் தன்னையும் இழக்க தேவை இல்லை இல்லையா ? என்றார் கிருஷ்ணர்.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய ஒப்படைத்தல் என்ற டேலிகேசன் என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மஹாபாரதத்தில் நமக்காக சொல்லி இருக்கிறார்கள்.

ஒப்படைத்தல் டெலிகேசன் என்பது என்ன?
நமக்கான செயல்களை செய்ய நமக்கு மாற்றாக நம்பிக்கைக்குரிய நபரை தேர்வு செய்து அவருக்கான கடமைகளை நாம் வழங்கினால் அதுவே டெலிகேசன்! செயல்களை விட சிந்தைகளுக்கு அதிக நேரம் தேவைப்படுவோர், கோடி கோடியாக கொடுத்தாலும் தலைவர்களின் சிந்தனைகளை சாமானிய மக்களிடம் இருந்து பெற்றுவிட முடியாது. ஆனால் இவர்களது சிறந்த சிந்தனைகளை செயல்படுத்த சாமானியர்களை பயன்படுத்துவதோடு அவர்களை முன்னேற்ற முடியும். அப்படிபட்ட முக்கியத்துவம் வாய்ந்த மனிதர்களுக்கு ஒப்படைத்தல் என்ற டெலிகேசன் தேவை.

யாருக்கெல்லாம் ஒப்படைத்தல் என்ற டெலிகேசன் தேவை?
மனிதரின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் தீர்மானிப்பது அவர்களுடைய ஆக்கபூர்வமான செயல்கள் தான். தங்களுடைய வாழ்வில் பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரத்தை மாற்றக்கூடிய மாபெரும் இலக்குகளை கொடிருக்கக்கூடிய மனிதர்கள் அவர்களது ஆக்கபூர்வமான சிந்தனைகளை செயல்படுத்த போதிய நேரம் இல்லாததால் அவர்களது சிந்தனைகளை செயல்களாக மாற்ற மனிதர்களின் நேரத்தை பெரும் வகையில் அவர்களை பணியில் அமர்த்தி தங்களுக்காக பயன்படுத்துவார்கள்..

மேலாண்மை இயக்குனர்கள்?
ஒரு நிறுவனம் அல்லது அமைப்புகளுக்கு அதனை சிறப்பாக நிர்வகிக்கும் பொறுப்பினை ஏற்று நடத்துபவர்கள், சமூக பொறுப்பில் இருக்கும் மனிதர்கள், ஆட்சியர்கள், மருத்துவர்கள், நீதிபதிகள், தலைமை நிர்வாகிகள், பொதுப் பணியில் இருக்கக் கூடியவர்கள், உற்பத்தி மற்றும் விற்பனையில் இருப்பவர்கள் என அனைவரும் தங்களுடைய நேரத்தை மிச்சப்படுத்த தங்களின் பணியை, தேவையை நிறைவு செய்ய மற்றவர்களை பயன்படுத்தலாம்.
இதில் ஒவ்வொரு மனிதரின் தேவை மற்றும் அவர்களது முக்கியத்தும் மற்றும் பொருளாதாரம் தான் இதனை தீர்மானிக்கிறது.

யாருக்கெல்லாம் ஒப்படைத்தல் என்ற டெலிகேசன் தேவை இல்லை?
இலக்குகள் மற்றும் நோக்கம் அற்றவர்கள், மனிதர்களை சரியான முறையில் பயன்படுத்த தெரியாதவர்கள், நேரத்தின் முக்கியத்துவம் தெரியாதவர்கள், பணம் மற்றும் உழைப்பின் அருமை புரியாதவர்கள், தோலை நோக்கு பார்வை அற்றவர்கள், சமூக பார்வை இல்லாதவர்கள் என வளரச்சியின் யதார்த்தத்தை புரியாதவர்களுக்கு இது தேவையில்லை. அவர்களுக்கு கீழ் உள்ள மனிதர்கள் சரியான வழிகாட்டுதல்கள் இன்றி தடுமாறுவார்கள் மற்றும் சரியான வளரச்சியையும் அவர்களால் எட்ட முடியாது . ஒரு நாளின் முடிவில் ஓடி ஓடி உழைத்திருப்பார்கள் ஆனால் அதற்கான பயன்களை பெற்றிருக்க மாட்டார்கள்.
நமக்கான ஒப்படைக்கக்கூடியவர்கள், டேலிகேட் செய்யும் மக்கள் எப்படி வேண்டும். ?*
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந் ததனை அவன்கண் விடல்
இரண்டு வரிகளில் வள்ளுவர் சொல்லிவிட்டார், நமக்கான செயல்களை நம்மை போல் செய்யாவிட்டாலும் அந்த சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் வெற்றிகரமாக செய்தால் போதும் அவ்வளவுதான். அத்தகைய மனிதர்களை நாம் பணி அமர்த்தினாலே நமது நிறுவனம் சிறந்ந வளர்ச்சியை பெறும்.

சரி சரியான நபர்களை எப்படி கண்டறிவது ?
பொதுவாக சிறந்த பணியாளர்கள்/ பொறுப்பினை ஏற்க கூடியவர்களுக்கு நடிக்க தெரியாது. உள்ளதை உள்ளபடி பேசக்கூடியவர்கள் ஆக இருப்பார்கள், இதன் காரணமாகவே சரியான நபர்களை நாம் இழப்பது அதிகம். மேலும் நேர்மையானவர்களாகவும், கடமையை சிறப்பாக செய்யக்கூடியவர்களாகவும் இருப்பார்கள், ஆனால் சுற்றியிருப்பவர்கள் இவர்களை சரியாக பயன்படுத்தாமல் இருப்பார்கள்.

இவர்களை பாராட்டினால் போதும் இன்னும் அதிக வேகமாக செயல்படுவார்கள், பொறுப்பினை தட்டி கழிக்க மாட்டார்கள், அனைத்தையும் விட நேரத்தை சரியாக கடைபிடிப்பார்கள்.. உங்களால் உங்களது தேவைகளுக்கு ஏற்ப தங்களின் வேலைகளை சரியான மனிதர்களை தேர்வு செய்து அவர்களுக்கு வழங்கி வெற்றிகரமாக செயல்படுத்திவிட்டால் போதும் வளர்ச்சி அதிகமாகும்.

இதனால் என்ன பயன் கிடைக்கும் ?

எந்திரன் படத்தில் நமது சூப்பர் ஸ்டார் ஒரு சிட்டியை வடிவமைப்பார் அது போல ஒரு தலைசிறந்த கொள்கை மற்றும் நோக்கத்திற்கான பயணத்தை மேற்கொள்ளும் போது இடை இடையே தடைகளாக சாதாரண வேலைகளுக்கான தேவைகள் வரும். அதற்கு நாம் தான் நேரடியாக செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாறாக நம் சார்பாக யார் வேண்டும் என்றாலும் அதை செய்யலாம்.

எடுத்து காட்டாக, 

பொருட்களை டெலிரி செய்வது,
தகவல்களை பதிவேற்றம் செய்வது
உற்பத்தியை சரிபார்ப்பது, போன்றவைகள்
இவைகளை சரியாக முறைப்படுத்தி ஒருவருக்கு வழங்கி விட்டால் அவரே இதனை சரியாக கையாண்டு விடுவார் எனில் அதன் பிறகு நாம் அதை விட முக்கியமான வேலைகளை தொடரலாம்.

நமக்கான 24 மணிநேரத்தில் 8 மணி நேரம் உடலுக்காக செலவிடுகிறோம். மீதம் உள்ள 16 மணி நேரம்தான் நம்மால் உழைக்க முடியும் அதில் எத்தனை வேலைகளை நாமே செய்யமுடியும் ? இதனை நிவர்த்தி செய்து வெற்றிகரமான நிறுவனத்தை செயல்படுத்த டெலிகேசன் மிகவும் முக்கியம்.

Contact: 9940600860
For more info: www.myelite.in

தொழில் மலர் - 5

சுமைகளை சுகமாக மாற்றும் மேலாண்மை இதழ் , நிறுவனங்களின் நிர்வாக திறன்களை மேம்படுத்தும் தொழில் மலர் - 5

மனிதர்களை இணைக்கும் மேலாண்மை கருத்துக்களை கொண்ட தொழில் மலர்



Contact: 9940600860
For more info: www.myelite.in

தொழில் மலர் - 4

வியாபாரத்தில் கைவிட வேண்டிய தவறுகள் மற்றும் முக்கிய மேலாண்மை நுணுக்கங்களை கொண்ட தொழில் மலர் -4

வேண்டியதை பெற வேண்டும் எனில் முதலில் நம் மனமும் கைகளும் ஏற்கும் வகையில் காலியாக இருக்க வேண்டும்‌.

அந்த வகையில் உங்களது மேலாண்மை தேவைகளை முழுமையாக நிரப்பும் தொழில் மலர்



Contact: 9940600860
For more info: www.myelite.in

தொழில் மலர் - 3

வெற்றியடைய தேவையான வழிமுறைகளை தேடி தேடி உங்களுக்கான தனித்துவமான விளக்கங்களை எளிய தமிழில் மேலாண்மை இதழ்

தொழில் மலர் - 3

தமிழில் மேலாண்மை கருத்துக்களை கொண்டு சேர்க்கும் மலர்

உங்களது வியாபாரத்தை மலர வைக்கும் வார்த்தைகளின் மலர் ..



Contact: 9940600860
For more info: www.myelite.in

தொழில் மலர் - 2

உங்களது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நேர் இணையாக உறுதுணையாக இருப்பது உங்களது மேலாண்மை திறன். பல்வேறு மேலாண்மை. கருத்துக்களையும் அனுபவங்களையும் மிகவும் எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட உங்களுக்கான பிரத்தியேக தொழில் மலர் பாகம் -2

முழுமையாக வாசித்து பயன்பெறுவதோடு நண்பர்களுக்கும் பகிர்ந்தளியுங்கள்



Contact: 9940600860
For more info: www.myelite.in

தொழில் மலர் - 1

நிறுவனங்களின் தலைவர்களுக்காக ஒரு தனித்துவமான தொழில்மலர் முற்றிலும் வியாபார மேலாண்மைகளை உள்ளடக்கிய கருத்துக்களோடு வாசித்து பயன் பெறுங்கள்.



Contact: 9940600860
For more info: www.myelite.in