Translate

செவ்வாய், 12 செப்டம்பர், 2023

ஒரு நிறுவனத்தின் தலைவராக உங்களது நேரம் முறையாக பாதுகாக்கப்பட்டால் ?





நேரமே போதவில்லை ? இது தான் வளரும் நிறுவன தலைவர்களின் இன்றைய நிலை! அப்படியானால் வளர்ந்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு இந்த பிரச்சனை இல்லையா ? நிச்சயமாக இல்லை! ஏனென்றால் ஒரு நிறுவனத் தலைவர் நேரம் போதவில்லை என்று சொன்னால் அவரால் சிறந்த நிறுவனத்தை உருவாக்க முடியாது? உங்களது கனவு மற்றும் இலட்சியமாக இருக்கும் உங்களது தொழில் சார்ந்த விஷயங்களுக்கு நேரம் போதவில்லை எனில் அதில் இரண்டு காரணங்கள் இருக்கலாம்.
1 - அதிகப்படியான வேலைப்பளு மற்றும் பொறுப்புகளை சுமப்பது.
2 - தவறான முறையில் தினசரி நடவடிக்கைகள் மற்றும் நேரத்தை கையாளுவது இந்த இரண்டும் ஆபத்துதான் ? ஏனென்றால் முதல் காரணத்தில் என்னதான் நீங்கள் திறமைசாலியாக இருந்தாலும் போதிய நேரம் இல்லாமல் சிறந்த நிர்வாகத்தை அளிக்க முடியாது. மற்றும் நீங்களும் சோர்வடைந்து சலிப்படையக்கூடும். இரண்டாவது காரணத்தில் நீங்கள் தான் பொறுப்பாளர் என்பதால் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள், எனவே உங்களால் ஏற்படும் தாமதமும், அதனால் ஏற்படும் இழப்புகளும் உங்களிடம் நேரடியாக கூற மாட்டார்கள். இதனால் தவறுகள் அதிகமாகும். சரி எப்படித்தான் சரி செய்வது? நேரம் சரியாகத்தான் இருக்கிறது, உங்களைத்தான் சரி செய்ய வேண்டும்.
1. தற்போதைய உங்களது நிலையை புரிந்து கொண்டு மனதார ஒப்புக் கொள்ளுங்கள்..
2. குறைந்தது 7 நாட்களுக்காவது தினசரி நீங்கள் செய்யும் காரியங்களை குறித்து வையுங்கள், இதற்கு தங்களுடைய போனில் நிறைய தொழில் நுட்பங்கள் இருக்கிறது. அதனை பயன்படுத்தலாம்.
3.தினமும் இரவு மற்றும் 7 நாட்களின் முடிவில் ஒட்டு மொத்த வாரத்தின் நடவடிக்கைகளையும் சோதனை செய்து அவற்றில் உங்களது முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் நடவடிக்கைகளை நீக்குங்கள். உங்களது நேரம் எப்போது வரை முழுமையாக உங்களுடையதாக உங்களுக்காக தங்களின் முன்னேற்றத்திற்காக இருக்கிறதோ அதுவரை நீங்கள் முன்னேற்றத்தை மட்டுமே காண்பீர்கள். உங்களது நேரத்தையும் நிறுவனத்தின் நேரத்தையும் சிறப்பாக மேம்படுத்த இன்றே தொடர்பு கொள்ளுங்கள்..
எங்களது you tube தளத்தினை பார்க்க https://www.youtube.com/watch?v=8ox0fGGNUnk
எங்களது வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெற https://chat.whatsapp.com/FwwbiaHLjyc27mXDbobDbd
எங்களது இணையதளத்தை பார்க்க www.myelite.in
நேரடியாக எங்களை தொடர்பு கொள்ள +919940600860

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக