Translate

திங்கள், 7 ஜூலை, 2025


 ஒரு பொதுவான தவறான கருத்து பல நிர்வாகிகளிடம் இருக்கிறது. தனக்குக் கீழ் இருக்கக் கூடிய பணியாளர்கள் அனைவரும் தனக்காகப் பணி செய்கிறார்கள் என்ற குறுகிய சிந்தனை, உண்மையில் நமக்குக் கீழ் பணியாளர்கள் இருப்பதனால் தான் நாம் அவர்களுக்கு நிர்வாகியாக இருக்கிறோம். மேலும் அவர்கள் நிறுவனத்திற்கான பணியாளர்களே தவிர நிர்வாகிக்கான பணியாளர் அல்ல. அவர்களது செயல்முறைகளை வழிநடத்தி விரைவாக வெற்றிபெற வைப்பதற்கு மாறாக அதற்கான தடைகளை ஏற்படுத்துவது இறுதியில் நிறுவனத்தின் வளர்ச்சியைத்தான் பாதிக்கும்..

பிசினஸ் கிங் மேக்கர்  - 6 

                         வியாபாரத்தில் மந்திரிகள் 

களத்தில் நமது பணியாளர்கள் சீறிப்பாய்ந்து வெற்றியடைய அவர்களை வழிநடத்தும் நிர்வாகிகள் மந்திரிகளாக இருக்க வேண்டும்.



 நல்லதோ, கெட்டதோ, நமது நிறுவனத்தின் ஏற்ற இறக்கங்களை முழுமையாகக் கையாள வேண்டியது நாம்தான், நிறுவனம் சரியில்லை, தொழில் சரியில்லை என்று நாம் பேசிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் நாம் செய்யும் அதே தொழிலை யாரோ ஒருவர் வெற்றிகரமாகச் செய்துகொண்டுதான் இருக்கிறார். முதல் பரிசு வாங்கும் ஒரு நபரை பார்த்துத்தான் நாம் முன்னேற வேண்டுமே தவிரப் பின்தங்கிய பல பேர்களைப் பார்த்து அல்ல.

பிசினஸ் கிங் மேக்கர்   - 5 

                        உங்களுடைய ஒவ்வொரு வெற்றியும் அடுத்த கட்ட ஆட்டத்தையும் போட்டியாளர்களையும் தீர்மானிக்கிறது. ஆனால் அந்த வெற்றியை தீர்மானிப்பது உங்களுக்குள் இருக்கும் ஆட்டக்காரர் மட்டுமே!



வியாபாரத்தின் ஓட்டுநர் ஆகிய உங்களுக்கு இருக்கும் பொறுப்புகளும் கடமைகளும் ஒரு பயணியாக இருக்கும் பணியாளர்களுக்கு பெரும்பாலும் மாறுபட்டு இருக்கும். ஆனால் அவர்கள் நம்முடன் பயணிக்கும் வரை அவர்களையும் அவர்களது நேரத்தையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்வதில் தான் நமது நிறுவனத்தின் வெற்றி இருக்கிறது..

பிசினஸ் கிங் மேக்கர் - 4 

     போட்டியாளரை வீழ்த்துவதை விட நீங்கள் வெற்றி பெறுவது முக்கியமானது! 

சதுரங்கத்தில் காய்களின் இருப்பும் இழப்பும் நாம் எடுக்கும் முடிவுகளை சார்ந்ததே! அதைப்போல வியாபாரத்தில் நம்மிடம் இருக்கும் அனைத்தையும், அனைவரையும் சரியான நேரத்தில் முறையாக பயன்படுத்த வேண்டாம் வெற்றி இருக்கிறது.

 

சனி, 5 ஜூலை, 2025


 வெற்றி பெற வேண்டும்!


ஆம் நாம் வெற்றி பெற வேண்டும், அதற்கு என்ன செய்யலாம்?

வெற்றி பெற எதுவெல்லாம் தேவையோ அவற்றையெல்லாம் செய்து பார்க்க வேண்டும்.

அதைவிட முக்கியம் நாம் இதுவரை எப்போதெல்லாம், எதனால், யார் மூலம் எல்லாம் தோல்விகளைச் சந்தித்து இருக்கிறோம் என்பது முக்கியமாகக் கண்டறிய வேண்டும். அவை மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

எங்களுடைய ஆலோசனைகளில் முதன்மையானது தவறுகளைக் கண்டறிந்து மீண்டும் நடக்காத வண்ணம் நிறுவனத்தையும் நிர்வாகத்தையும் சரி செய்வது.

அதன் பிறகுதான் புதிய முயற்சிகளைக் கையாளவேண்டும்..

பிசினஸ் கிங் மேக்கர்  - 3 
                             சதுரங்கத்தை போல வியாபாரத்திலும் நகர்வுகளை தீர்மானிப்பது நாம் பின்பற்றும் யுக்திகளும் நமக்குத் தெரிந்த யுகங்களும் தான், அவை இரண்டையும் எப்போது வரை உங்களது போட்டியாளர்களால் கண்டறிய முடியவில்லையோ அதுவரை உங்கள் வெற்றிகள் தொடரும்...


 வியாபாரத்தில் போட்டியாளர் ?


ஒரு போட்டியில் நீங்கள் மட்டுமே ஓடுகின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம், மக்களுக்கு நீங்கள் எப்படிச் சிறந்தவர் என்பது எப்படிப் புரியும் ?

கடைசிவரை நீங்கள் ஓடிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்!

எப்போது போட்டியாளர் வருகின்றனரோ அப்போதுதான் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பது மக்களுக்குப் புரியும்.
போட்டியாளர்களைப் புறம் தள்ளவோ அல்லது அவர்கள் முன்பு கௌரவத்திற்காகவோ நாம் செய்யும் செயல்கள் உண்மையில் மக்களைச் சென்றடைவதில்லை எப்போது மக்களின் மனதில் நிற்கும் அளவிற்கு நம்முடைய செயல்கள் இருக்குமோ அப்போது வெற்றியையும் தாண்டி மதிப்பு என்பது உருவாகும்.

பிசினஸ் கிங் மேக்கர் - 2 
                   உங்களது போட்டியாளரின் நகர்வுகளை பார்த்து அதைப் பற்றியே சிந்திக்காமல் அதற்கு ஏற்ப உங்களது வியாபாரத்தின் நகர்வுகளை திட்டமிடும் போது தான் உங்களது வெற்றி அருகில் வரும்.....


 வியாபாரத்தில் வெற்றி பெற முக்கியமாக இரண்டு செயல்களைச் செய்வார்கள்.


1. வெற்றி பெறக் கூடிய வகையில் தொழிலைத் தேர்வு செய்வது.
2. தேர்வு செய்த தொழில் வெற்றி பெறும் வகையில் செயல்படுவது.

ஆகவே முதலில் நாம் எதனைத் தேர்வு செய்கிறோம், என்பதும் தேர்வு செய்த பின்பு அதனை எப்படிச் செயல்படுத்துகிறோம் என்ற இரண்டும் தான் நம்முடைய முன்னேற்றத்தையும் வெற்றியையும் தீர்மானிக்கிறது..

இதனை எப்படிச் சரி செய்வது என்பதைத் தெரிந்து கொள்ளக் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் பதிவு செய்து எங்களது வியாபார ஆலோசனைகளைப் பெறலாம்..

பிசினஸ் கிங் மேக்கர் -1  
                        சதுரங்கத்தில் நீங்கள் தேர்வு செய்யும் நிறம் உங்களது நகர்வை தீர்மானிப்பது போல, உங்களது வியாபாரத்தின் தேர்வு உங்களது வெற்றியை தீர்மானிக்கிறது.

வெள்ளி, 4 ஜூலை, 2025


 குடும்பத்தின் நற்பெயர் என்பது குடுப்பத்தில் உள்ள அனைவரும் செழிப்பாக இருப்பது. நிறுவனத்திலும் சமமான முன்னேற்றத்தை வழங்க அனைவரும் ஒரே‌ நேர்கோட்டில் சிந்திக்க வேண்டும்.

வியாபாரக்காதல் 

                        "Spread Your Love to people To be Love" 

  • நம் அன்புடன் இருப்பதை தாண்டி நாம் நம்மை சுற்றி இருப்பவர்களையும் அன்புடன் வைத்திருப்பது அவசியம். 
  • நிறுவனத்தின் வளர்ச்சியோடு சேர்ந்து அதனை சார்ந்து இருப்பவர்களையும் வளர்ச்சி அடைய செய்வது அவசியம்