Translate

புதன், 18 ஜூன், 2025


இன்றைக்கு "ஊ" பற்றி பார்க்கலாம்.

அ, ஆ, இ, ஈ,உ, வழிமுறைகளில் உங்களது சுய முன்னேற்றம் சிறப்பாக அமைந்திருக்கும், அடுத்த கட்ட நகர்வான நமக்கான சமூகத்தை உருவாக்கும் நேரம் எனவே இப்போது நம் உடன் பயணிக்க விரும்பும் சக தொழில் வல்லுனர்களை தேர்வு செய்து அவர்களும்‌ வெற்றியடைய உதவுங்கள்.

உங்கள் தொழிலுக்கான 'ஊ' என்ன ?

  •  உங்களைப் போன்ற சிறந்த நிர்வாக திறன் உடையவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்துங்கள். 
  • அவர்களது தொழிலும் உங்களது தொழிலும் ஒன்றுக்கொன்று பயன்படக்கூடியதாக இருக்கட்டும்.
  • அவர்களுடைய கொள்கைகளும் கோட்பாடுகளும் உங்களுடைய நிறுவனத்திற்கும் உங்களுக்கும் ஒத்துப் போகக்கூடியதாக இருக்கட்டும்.
  • தொடர்ந்து மற்றவர்களுடைய முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருங்கள், அவர்களுக்கு வழிகாட்டுங்கள். 

அடுத்த பதிவில் உங்கள் தொழிலுக்கான எ வை தெரிந்துகொள்ளலாம்




 



இன்றைக்கு "உ" பற்றி பார்க்கலாம்.

அ, ஆ, இ, ஈ, படிநிலைகளை கடக்கும் போது உங்களுடைய‌ தொழிலின் அடிப்படை தேவையை உணர்ந்திருப்பீர்கள்.
இப்போது அதிகமாக மேலாண்மையில் கவனம் செலுத்துங்கள். சீராகவும் தொடர்ச்சியான முன்னேற்றத்தை தரும் வகையிலும் வகைப்படுத்துங்கள்.

உங்கள் தொழிலுக்கான 'உ' என்ன? 

  • உங்கள் நிறுவனத்தின் மேலாண்மையை சீராக பராமரியுங்கள்.
  • உங்களுடைய வளர்ச்சி சீரானதாகவும், தொடர் முன்னேற்றமாகவும்இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்த பதிவில் உங்கள் தொழிலுக்கான 'ஊ' வை தெரிந்து கொள்ளலாம்




 நிறுவனத்தின் கொள்கைகளை தீர்மானிப்பது அதன் வளர்ச்சியை தீர்மானிப்பதற்கு சமம். 

உங்கள் தொழிலுக்கான 'ஈ' என்ன? 

  •  உங்களது நிறுவனத்திற்கான சிறந்த கொள்கைகளை உருவாக்குங்கள்.
  • உங்களுடைய கொள்கைகள் தொழிலாளர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் இருக்கட்டும்.
  • மேலும் உங்களுடைய கொள்கைகள் வாடிக்கையாளரின் நன்மதிப்பை பெறுவதாக இருக்கட்டும்.
  • நிறுவனத்தின் உள்ளே ஆரோக்கியமான மனநிலையை உருவாக்குங்கள். 
  • நிறுவனத்தின் பணியாளர்களின் ஆரோக்கியமான மனோநிலைக்கு ஏற்ப வெளி உலகிலும் சிறந்த மதிப்பை பெறுவீர்கள்.

அடுத்த பதிவில் உங்கள் தொழிலுக்கான 'உ' வை தெரிந்து கொள்ளலாம்.



செவ்வாய், 17 ஜூன், 2025


 அடிப்படை கட்டமைப்பு எவ்வளவு அவசியமோ, அதே அளவு வளர்ச்சி மற்றும் காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப அதனை மேம்படுத்துவதும் அவசியம். மேலும் அந்த மாற்றங்களுக்கு ஏற்ப நிறுவனத்தின் உள்ளார்ந்த செயல்பாடுகளை சீராக வடிவமைத்து அதற்கு ஏற்ப பணியாளர்களையும் மேம்படுத்த வேண்டும்.

உங்கள் தொழிலுக்கான 'இ' என்ன?

  • தொழிலின் அடிப்படை கட்டமைப்பினை தொடர்ந்து மேம்படுத்துங்கள்.
  • தொழிலின் விரிவாக்கத்திற்கு ஏற்ப உட்கட்டமைப்பை எளிமையானதாகவும் அனைவரும் பங்களிக்கவும் வகையில் மாற்றுங்கள். 

அடுத்த பதிவில் உங்கள் தொழிலுக்கான 'ஈ' தெரிந்து கொள்ளலாம்

திங்கள், 16 ஜூன், 2025


 நிறுவனத்தின்‌ வளர்ச்சிக்கு அடிப்படை மிக முக்கியம் என்பதை அ வில் பார்த்தோம். இதன் பிறகு‌ பின்பற்ற வேண்டிய ஆ மிக முக்கியமானது. அதுதான் மாற்றுச்சிந்தனைகள். இந்த மாற்றுச்சிந்தனைகள் மூலம் தான் செயல்முறைகளை மாற்றியமைத்து நம் கட்டமைப்புகளை சீர் செய்ய முடியும். இதற்கான‌ அனைத்து ஆலோசனைகளையும் நீங்கள் நம் Elite Management Consulting Services மூலம் பெற முடியும்.

உங்கள் தொழிலுக்கான 'ஆ' என்ன?

  • வினை முறையாக செயல்படுத்துங்கள். 
  • அடிப்படையில் சிறந்த கட்டமைப்பினை உருவாக்கிய பின்பு எளிய மாற்றுச் சிந்தனைகளால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் சேவைகளை வழங்குங்கள்.

அடுத்த பதிவில் உங்கள் தொழிலுக்கான 'இ' தெரிந்து கொள்ளலாம்

ஞாயிறு, 15 ஜூன், 2025


 

ஒரு தொழிலின் கட்டமைப்பில் மேற்கொள்ள வேண்டிய படிநிலைகள் நம் மொழியில் உள்ள உயிரெழுத்து போன்றவை. இதில் முதல்‌‌ எழுத்தான "அ" உங்களுக்காக..

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும், சந்தேகங்களையும் அன்புடன் வரவேற்கிறோம்.

உங்கள் தொழிலுக்கான அ  என்ன? 

  • தொடங்க வேண்டிய இடத்தை சரியாக தீர்மானம் செய்யுங்கள்.
  • தொழிலை தொடங்கிய பின்பு அதற்கான ஏற்ற இறக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.
  • கற்றுக் கொண்ட விஷயங்களை வைத்து உங்கள் தொழிலை சமநிலைக்கு கொண்டு வாருங்கள்.
  • ஒரு சீரான பாதையை கண்டறிந்த பிறகு அந்த தொழிலின் படிப்படியான உயரத்தையும் உறுதியான கட்டமைப்பையும் உருவாக்கங்கள்.

வெள்ளி, 13 ஜூன், 2025


 விற்பனைக்கும் வாழ்விற்கும் ஒரு தொடர்பு உண்டு,


விற்பனை என்பது நிறுவனத்திற்கும் வாடிக்கையாளருக்கு இடையே ஏற்படும் பந்தம்.

ஒவ்வொரு வாடிக்கையாளரும் மன ரீதியாக முழுமையாக திருப்தி அடையும் பொழுது அவர் தொடர்ந்து வாடிக்கையாளராக பயணிக்கிறார்.

நமது போட்டியாளர்களின் சேவைகளை பற்றி வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ளும் போதும் அவை அனைத்தையும் விட நான் தேர்வு செய்தது சிறந்தது என்ற கர்வம் அல்லது அந்த பெருமையை தொடர்ந்து வாடிக்கையாளரின் மனதில் நிலைநிறுத்த வேண்டும். அப்போது விற்பனை எப்போதும் உச்சத்தில் இருக்கும்.

  • உங்களது நிறுவனம் அல்லது பிராண்ட் பற்றி அறிமுகத்தை பல்வேறு விதங்களில் தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும்.
  • நீங்கள் உங்களது வாடிக்கையாளர்களுக்காக வழங்கும் சேவைகளை தெளிவாக விளக்க வேண்டும்.
  • மற்றவர்களை விட எந்த விதத்தில் உங்களது நிறுவனம் சிறந்தது நீங்கள் வழங்கும் சேவைகளின் முக்கியத்துவத்தையும், அதனால் கிடைக்கும் நன்மைகளையும் கூற வேண்டும்.
  • நீங்கள் வாடிக்கையாளர்களை கையாளும் முறைகள் வரவேற்பது, தேவைகளை கேட்பது,விளக்கங்கள் கொடுப்பதும் தொடர்ந்து பின்பற்றுவது போன்றவற்றை நேர்மறையாக இருக்க வேண்டும்.
  • உங்களைத் தேடி வரும் வாடிக்கையாளருக்கு எந்த மாதிரியான மதிப்பினை கொடுக்கிறீர்கள் என்பது நேர்மறையாக நிறுவனத்தின் மதிப்பை உயர்த்தும்.
  • மேற்கண்ட அனைத்தையும் சரியாக செய்து விட்டால் வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவை என்பது தெளிவாக புரிந்துவிடும் அதனால் விற்பனை எளிதாகவும் அதிகமாகவும் நடைபெறும்.