விற்பனைக்கும் வாழ்விற்கும் ஒரு தொடர்பு உண்டு,
விற்பனை என்பது நிறுவனத்திற்கும் வாடிக்கையாளருக்கு இடையே ஏற்படும் பந்தம்.
ஒவ்வொரு வாடிக்கையாளரும் மன ரீதியாக முழுமையாக திருப்தி அடையும் பொழுது அவர் தொடர்ந்து வாடிக்கையாளராக பயணிக்கிறார்.
நமது போட்டியாளர்களின் சேவைகளை பற்றி வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ளும் போதும் அவை அனைத்தையும் விட நான் தேர்வு செய்தது சிறந்தது என்ற கர்வம் அல்லது அந்த பெருமையை தொடர்ந்து வாடிக்கையாளரின் மனதில் நிலைநிறுத்த வேண்டும். அப்போது விற்பனை எப்போதும் உச்சத்தில் இருக்கும்.
- உங்களது நிறுவனம் அல்லது பிராண்ட் பற்றி அறிமுகத்தை பல்வேறு விதங்களில் தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும்.
- நீங்கள் உங்களது வாடிக்கையாளர்களுக்காக வழங்கும் சேவைகளை தெளிவாக விளக்க வேண்டும்.
- மற்றவர்களை விட எந்த விதத்தில் உங்களது நிறுவனம் சிறந்தது நீங்கள் வழங்கும் சேவைகளின் முக்கியத்துவத்தையும், அதனால் கிடைக்கும் நன்மைகளையும் கூற வேண்டும்.
- நீங்கள் வாடிக்கையாளர்களை கையாளும் முறைகள் வரவேற்பது, தேவைகளை கேட்பது,விளக்கங்கள் கொடுப்பதும் தொடர்ந்து பின்பற்றுவது போன்றவற்றை நேர்மறையாக இருக்க வேண்டும்.
- உங்களைத் தேடி வரும் வாடிக்கையாளருக்கு எந்த மாதிரியான மதிப்பினை கொடுக்கிறீர்கள் என்பது நேர்மறையாக நிறுவனத்தின் மதிப்பை உயர்த்தும்.
- மேற்கண்ட அனைத்தையும் சரியாக செய்து விட்டால் வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவை என்பது தெளிவாக புரிந்துவிடும் அதனால் விற்பனை எளிதாகவும் அதிகமாகவும் நடைபெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக