Translate

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025

தொழில் மலர் - 9

அனைவரும் பெற விரும்பும் வெற்றிக்கு பின் ஒரு சிறந்த ஆக்கப்பூர்வமான சிந்தனை இருக்கும்.

அதற்கு துணைபுரியும் வகையில் உங்களுக்காக உருவாக்கப்பட்ட பிரத்தியேக தொழில் மலர். magazine 9



Contact: 9940600860
For more info: www.myelite.in

தொழில் மலர் - 8

பொதுவாக உலக நிகழ்வுகளை நேரடியாக கண்காணிக்கும் நாம் அந்த நிகழ்வுகளின் மூலம் ஏற்படும் விளைவுகளை அறிந்து கொள்ள தவறி விடுகிறோம்.

அனைத்து விதமான தொழில் வல்லுநர்களுக்கும் வெற்றியை கொடுக்கும் வகையிலான சிறப்பான தொழில் மலர். magazine 8



Contact: 9940600860
For more info: www.myelite.in

தொழில் மலர் - 7

உங்களது வெற்றியை தீர்மானிக்கும் காரணிகளில் முதல் கட்டமாக இருப்பது நமக்கான திட்டங்களும் அதற்கான செயல்களும். அதற்கும் முன்னதாக ஒவ்வொரு தொழில் நிர்வாகிக்கும் தேவைபடுவது அவர்களால் எந்த அளவிற்கு உயரங்களை தொட வேண்டும் என்ற இலக்குகள்.

உங்களது இலக்குகளை இன்னும் தெளிவாக திட்டமிட உதவும் வகையில் எலைட் தொழில் மலர். முற்றிலும் வியாபார வளர்ச்சிக்கான தனித்துவமான மலர். Magazine 7



Contact: 9940600860
For more info: www.myelite.in

தொழில் மலர் - 6

உங்களது வளர்ச்சிக்கான பாதையும் அதற்கான வழிமுறையும் எந்த அளவிற்கு தெளிவாக இருக்கிறதோ அதே அளவிற்கு உறுதியாக வெற்றியை பெற முடியும்.

அதற்கான விளக்கங்களை கொண்ட முழுமையான எலைட் தொழில் மலர் . முழுமையாக படித்து பயன் பெறுங்கள். Magazine 6



Contact: 9940600860
For more info: www.myelite.in

தொழில் மலர் - 5

சுமைகளை சுகமாக மாற்றும் மேலாண்மை இதழ் , நிறுவனங்களின் நிர்வாக திறன்களை மேம்படுத்தும் தொழில் மலர் - 5

மனிதர்களை இணைக்கும் மேலாண்மை கருத்துக்களை கொண்ட தொழில் மலர்



Contact: 9940600860
For more info: www.myelite.in

தொழில் மலர் - 4

வியாபாரத்தில் கைவிட வேண்டிய தவறுகள் மற்றும் முக்கிய மேலாண்மை நுணுக்கங்களை கொண்ட தொழில் மலர் -4

வேண்டியதை பெற வேண்டும் எனில் முதலில் நம் மனமும் கைகளும் ஏற்கும் வகையில் காலியாக இருக்க வேண்டும்‌.

அந்த வகையில் உங்களது மேலாண்மை தேவைகளை முழுமையாக நிரப்பும் தொழில் மலர்



Contact: 9940600860
For more info: www.myelite.in

தொழில் மலர் - 3

வெற்றியடைய தேவையான வழிமுறைகளை தேடி தேடி உங்களுக்கான தனித்துவமான விளக்கங்களை எளிய தமிழில் மேலாண்மை இதழ்

தொழில் மலர் - 3

தமிழில் மேலாண்மை கருத்துக்களை கொண்டு சேர்க்கும் மலர்

உங்களது வியாபாரத்தை மலர வைக்கும் வார்த்தைகளின் மலர் ..



Contact: 9940600860
For more info: www.myelite.in

தொழில் மலர் - 2

உங்களது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நேர் இணையாக உறுதுணையாக இருப்பது உங்களது மேலாண்மை திறன். பல்வேறு மேலாண்மை. கருத்துக்களையும் அனுபவங்களையும் மிகவும் எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட உங்களுக்கான பிரத்தியேக தொழில் மலர் பாகம் -2

முழுமையாக வாசித்து பயன்பெறுவதோடு நண்பர்களுக்கும் பகிர்ந்தளியுங்கள்



Contact: 9940600860
For more info: www.myelite.in

தொழில் மலர் - 1

நிறுவனங்களின் தலைவர்களுக்காக ஒரு தனித்துவமான தொழில்மலர் முற்றிலும் வியாபார மேலாண்மைகளை உள்ளடக்கிய கருத்துக்களோடு வாசித்து பயன் பெறுங்கள்.



Contact: 9940600860
For more info: www.myelite.in

செவ்வாய், 29 ஜூலை, 2025


வியாபார நரகாசுரன்கள் 30/30


மற்றவர்களை அங்கீகாரம் செய்யாமல் இருப்பது - Not Recognising others


காலம் முழுவதும் இந்த நிறுவனத்திற்கு வேலை செய்து நான்‌ என்ன பலன் அடைந்தேன்.. என்ற வார்த்தை உங்களது பணியாளர்களிடம் இருந்து வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
மனித வாழ்க்கையில் அனைத்தும் இருந்தும் ஒரு அங்கீகாரம் இல்லாவிட்டால் இந்த மனம் இருண்டு போய்விடும்.

நம் வாழ்கையில் வெளிச்சத்தை கொண்டுவர உடன் இருக்கும் மனிதர்களுக்கு கொஞ்சம் வெளிச்சத்தில் பங்கு பெற செய்வதால் அவர்களது உள்ளம் ஆனந்தமடையும்..

அனைவரையும் அவர்களது பங்களிப்பிற்கு ஏற்ப அங்கீகரிப்போம்..‌
 


 வியாபார நரகாசுரன்கள் 29/30


தனக்காக நேரம் ஒதுக்காமல் இருப்பது - Not spending Time for Self.


விறகு வெட்டும் நேரத்தை விட கோடாரி கூர்மையை சீர் செய்யும் நேரம் மிக முக்கியமானது. எப்போதும் ஒடிக்கொண்டிருக்கும் நாம் சற்று நிதானாமாக யோசிக்க, நடவடிக்கைகளை சீர் செய்ய நமக்காக நேரம் ஒதுக்குவது அவசியம். எனவே சுய மேம்பாட்டிற்காக எப்போதும் நேரம்‌ ஒதுக்குங்கள்.


 வியாபார நரகாசுரன்கள் 28/30


திட்டங்களை செயல்படுத்தாமல் இருப்பது - Lagging on Execution


நம்முடைய கனவுகளும் கற்பனைகளும் உயிர் பெறுவது நம்முடைய செயல்கள் மூலம்தான் அதனால்தான் உலகின் தலைசிறந்த சொல் செயல் என்கின்றனர்.

செயல் ஆக்கம் பெறும்போது அந்த ஆற்றலால் முன்னேற்றம் ஏற்படுகிறது.

இருக்கின்ற இடத்திலேயே இருந்துவிட்டால் மரம் செல்லரித்துபோய்விடும் அதனை பயன்பாட்டில் வைக்கும் போது காலத்திற்கும் பயன் அளிக்கிறது.

நிறுவனத்தின் முன்னேற்றமும் நம்முடைய செயல்களின் உருமாற்றத்தில் தான் இருக்கிறது..

சனி, 26 ஜூலை, 2025


 வியாபார நரகாசுரன்கள் 27/30

Not preparing the self and team for future - அடுத்த கட்ட இலக்குகளுக்கு தன்னையும் தன் குழுவையும் தயார் செய்யாமல் இருப்பது..

நிறுவனத்தின்‌ வளர்ச்சி என்பது நிகழ்காலத்தை பொறுத்து மட்டுமே அமைவதில்லை. மாறாக எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் நிர்வாகத்தையும் தயார்படுத்துதலில்தான் நிறுவனத்தின் வளர்ச்சியும் சிறப்பாக அமைகிறது.

கட்டிடத்தின் அஸ்திவாரத்தினை எவ்வளவு உறுதியாக அமைக்கிறோமோ அந்த அளவிற்கு உயரத்தையும் அதிகரிக்க முடியும்


வியாபார நரகாசுரன்கள் 26/30


Not planning for Daily Schedules - தனக்கான தினக்ச்சரியங்களை திட்டமிடாமல் இருப்பது


நேரம் தான்‌ தேவைகளை தீர்மானிக்கிறது, சரியான‌ நேரத்தில் தரப்படும் உணவு உடலை வளர்க்கிறது.

தவறான நேரத்தில் தரப்படும் உணவு உடலை பாதிக்கிறது.

நாம் நிர்வகிக்கும்‌ நிறுவனத்திலும் நம்முடைய தினசரி வேலைகளை திட்டமிடா விட்டால் நிறுவனமும் நிர்வாகமும் பாதிக்கப்படுகிறது.

நிர்வாகி சரியான முறையில் செயல்படும் போது நிர்வாகமும் சரியான முறையில் வளர்ச்சி அடைகிறது.‌


வியாபார நரகாசுரன்கள் 25/30


wrong things at right Time
சரியான நேரத்தில் தவறான செயல்களை செய்வது


நிறுவனத்தின் நேரமும் நமக்கான‌ நேரமும் ஒன்று அல்ல.

நாம் வேறு நிறுவனம் வேறு..

நமக்கு பிரச்சனைகள் மற்றும் சூழ்நிலைகளை காரணம் காட்டி நம்முடைய சுய விருப்பத்திற்காக நிறுவனத்தின் நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் போது நிறுவனம் சார்ந்த உற்பத்தி மற்றும் பணியாளர்களின் முன்னேற்றத்தையும்‌ அது பாதிக்கும்.

நமக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் நம்முடைய பங்களிப்பை நிறுவனத்தில் தேவையான இடத்தில் தேவையான‌ நேரத்தில் சரியாக வழங்கினால் முன்னேற்றம் சீராக இருக்கும்..

வெள்ளி, 25 ஜூலை, 2025


 வியாபார நரகாசுரன்கள் 24/30


Not Setting Income goals - தனக்கான வருமானத்தை தீர்மானிக்காமல் இருப்பது.

ஒரு வியாபரத்தில் எதிர்பாரபாராத செலவுகள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். ஆனால் எதிர்பாராத வருமானம் நிச்சயமாக ஏற்படாது. எனவே செலவுகளை விட நாம் ஏற்படுத்த வேண்டிய வருமானத்தை நிச்சயமாக தீர்மானித்து தினசரி அதனை ஆய்வு செய்ய வேண்டும்.‌


வியாபார நரகாசுரன்கள் 23/30

Neglecting The Health - ஆரோக்கியத்தில் அக்கறை இன்றி இருப்பது.

அனைத்தையும் விட எனக்கு தொழில்தான்‌ முக்கியம் என்ற பல நேரங்களில் நாம் இருப்பதுண்டு.

நம்முடைய காலத்திற்கு பிறகும் நம்முடைய தொழில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு முக்கியமாக நம்முடைய உடல்நிலை ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
நீங்கள் பயன்படுத்தும்‌ வாகனத்தை பெட்ரோல் இல்லாமல் அல்லது சக்கரத்தில் காற்று‌ இல்லாமல் சிறிது தூரம் இயக்குவதே கடினம் அதே போல் நம் உடலுக்கும் சரியான‌ நேரத்தில் தேவையானதை வழங்கும் போது உங்களால் நீண்ட தூரம் பயணிக்க முடியும்.


வியாபார நரகாசுரன்கள் 22/30.

தவறான‌ மனிதர்களை பின்பற்றுவது - Following Wrong People


நாம் சுயமாக செய்யும் தவறுகளை விட வியாபாரத்தில் மற்றவர்களை பார்த்து செய்யும் தவறுகள் தான்‌ அதிகம்..

சரியான நேரத்தில் தரப்படும் சரியான மருந்து நோயினை சரிசெய்வது போல சரியான‌ மனிதர்களின் வழிகாட்டுதல்கள் நம்‌ வியாபாரத்தில் ஏற்படும்‌ பிரச்சனைகளை சரியாக தீர்க்க உதவும் 

புதன், 23 ஜூலை, 2025

வியாபார நரகாசுரன்கள் 21/30

இருபத்தொன்றாவது நரகாசுரன் - சுயமாக செயல்படாமல் இருப்பது - Not Performing Individually

எப்போதும் மற்றவர்களை சார்ந்து இருப்பது. 

வியாபாரத்தில் அனைவரது ஒத்துழைப்பும் தேவைதான்‌, வாகனத்தின்‌ அனைத்து பாகங்களும் முக்கியம் என்றாலும் அவை அனைத்தின்‌ இயக்கத்தையும் கட்டுப்படுத்துவது இன்ஜின் தான். நம் நிறுவனத்திலும் நாம் இன்ஜினாக இருக்க வேண்டுமே தவிர‌ ஒரு பாகமாக மட்டுமே இருந்துவிட கூடாது.

நீங்கள் பலரிடம் ஆலோசனைகளையும் வழிமுறைகளையும் பெற்றாலும் முடிவுகளை எடுப்பதிலும்‌ அதனை செயல்படுத்துவதிலும் சுயமாக இயங்கும் போதுதான் உங்கள் முன்னேற்றத்தின்‌ வேகத்தை அதிகப்படுத்த முடியும்..

 


வியாபார நரகாசுரன்கள் 20/30

இருபதாவது நரகாசுரன் - not spending time with family - குடும்பத்திற்காக நேரம் ஒதுக்காமல் இருப்பது

அதிக பணம் செலவு செய்து வீட்டை கட்டி விட்டு அதில் இருப்பதற்கு நேரம் ஒதுக்காமல் இருந்தால் எப்படி இருக்கும் ?


அப்படி தான் நம் வியாபாரமும். நாம் உழைப்பதும் வியாபாரம் செய்வதும் நம் குடும்பத்திற்காகத்தான் ஆனால் அந்த குடும்பத்திற்காக நேரத்தை செலவு செய்யவில்லை எனில் நம் முடைய வெற்றிகளை யார்தான் கொண்டாடுவார்கள்?

நம் நிறுவனத்தின் வெற்றி நம் குடும்ப உறுப்பினர்களையும், பணியாளர்களின் குடும்பத்தையும், வாடிக்கையாளர்களின்‌ குடும்பத்தையும் மனதளவிலும் உடல் அளவிலும் ஆரோக்கியமாக வைத்திருப்பதில் தான் இருக்கிறது.