Translate

திங்கள், 30 ஜூன், 2025


 நிறுவனம் தன் தேவைகளுக்காகவும் நம் ஒப்புதலுக்காகவும் தேங்கி நிற்கிறது எனில் நமக்கு தெரியாமல் நாம் அதன் வளர்ச்சியில் தடையாக இருக்கிறோம். மறந்தும் கூட நாம் தடையாக இருக்க கூடாது. இதைவிட நிறுவனத்திற்கு பெரிய சுமை இருக்க முடியாது.

வியாபாரக்காதல் 

                "Understanding the Needs before it Required"  

  • தங்களுடைய அன்புக்குரியவர்களின் தேவையே அவர்கள் கேட்பதற்கு முன்பே பூர்த்தி செய்து விடுவோம். 
  • உங்கள் நிறுவனத்தின் தேவைகளையும் அதற்கான நேரம் வரும் முன்பே ஏற்படுத்தி விட்டால் தடைகளற்ற விரைவான வளர்ச்சி ஏற்படும்.



 வியாபாரத்தின் வளர்ச்சியை விரும்பும் நாம் அதற்கான அமைப்பை ஏற்படுத்துவதற்கும் முயற்சிகளை முழு விருப்பத்துடன் மேற்கொள்ள வேண்டும். உண்மையில் நம்முடைய மனம் தான் எல்லைகளை தீர்மானிக்கிறதே தவிர இந்த உலகம் அல்ல.

வியாபாரக்காதல் 

                           "Love with out limits" 

  • ஒவ்வொரு நாளும் இவ்வளவு அன்பு என்று நாம் அளந்து அளந்து பகிர முடியாது.
  •  மனம் விரும்பும் வியாபாரத்திலும் நம்மால் அளவு பார்த்து செயல்பட முடியாது.



அனைவரும் விரும்பும் வகையில் நிறுவனத்தை மாற்ற நினைக்கும் நாம் அதற்கு முன்‌ அனைவரும் விரும்பத்தக்க வகையில் நம்மையும் மாற்றிக்கொண்டால் நிறுவனம் அமோகமாக இருக்கும்..

வியாபாரக்காதல் 

                  "Your self worth makes your business worth" 

  • உங்களுடைய மதிப்பு உயரும்போது உங்களை சார்ந்து இருக்கும் மற்றவர்களின் மதிப்பும் உயர்கிறது. 
  • வியாபாரத்தின் மதிப்பினை உயர்த்த முதலில் அதன் பொறுப்பாளராக இருக்கும் நம்முடைய மதிப்பை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

 

வெள்ளி, 27 ஜூன், 2025


 உங்களது வியாபாரம் நேசிக்கப்படும் போது அது தினசரி போராட்டாமாக இல்லாமல் குதுகலமாக இருக்கும்.

வியாபார காதல் 

                             "Make Love Not War" 
  • மனம் அன்பு செலுத்த ஆரம்பித்து விட்டால் அதன் பிறகு முன் வரும் சவால்கள் அனைத்தையும் சுலபமாக எதிர்கொள்கிறது. 
  • வியாபாரத்தின் நோக்கம் உங்கள் மனதில் நிறைந்திருக்கும் போது எதிர்வரும் சவால்களையும் எளிதாக சமாளிக்க முடியும்.


 நம்பிக்கையை வழங்குவதும் பெறுவதும் வியாபாரத்தில் அவ்வளவு எளிதல்ல, ஆனால் ஒருமுறை உருவாக்கும் நம்பிக்கையின் ஆதாரத்தில் சிறப்பான வளரச்சியை நம்மால் பெறமுடியும்.

வியாபார காதல் 
                               "Love is about Trust" 
  • அன்பு பிறக்கும் முன்பு அதற்கான நம்பிக்கை பிறக்கிறது. 
  • வியாபாரத்திலும் அந்த நம்பிக்கை வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவிட்டால் அவர்களும் நம்மை நேசிப்பார்கள்.


 வியாபாரக்காதல் -1/15


நம்முடைய நோக்கம் விரிவானதாக இருக்கும் போது அதற்கான வாய்ப்புகளையும் விரிவுபடுத்த வேண்டும். அப்படி எல்லைகள் அற்ற தொடர்புகள் ஏற்படும் போதுதான் வியாபாரத்தின் எல்லைகளும் விரிவடையும்.

வியாபார காதல் 
                                  "Love has no Border" 
  • அன்பு எல்லையற்று இருக்கும்போது, இதுதான் இவர்கள் மட்டும்தான் என்ற எல்லைகள் இருக்காது. 
  • உங்களது வியாபாரத்தில் எல்லைகள் கடந்து சேவைகளை வழங்கும்போது வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்.

வியாழன், 26 ஜூன், 2025


 நான் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு கற்றுக்கொண்டதை நேற்று வந்த நீ எளிதாக தெரிந்துகொண்டு வேகமாக முன்னேறலாம் என்று நினைக்கிறாயா ? புதியவர்களிடம் காட்டும் பொதுவான அணுகுமுறைகளில் இதுவும் ஒன்று. உலக மாற்றத்தில் பல வருடங்களாக இருக்கும் ஒரு நிறுவனத்தை விட இப்போது வந்த புதிய நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு முன்னேறிவிடுகிறது. நமக்கு பக்கத்தில் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கும் மனிதர்களையே நாம் முன்னேற்ற உதவாமல் தடுக்கிறோம். மறைமுகமாக இது நிறுவனத்தில் பாதிப்பை ஏற்படுத்தி இறுதியில் நம்முடைய போட்டியாளர்களை வெற்றியடைய செய்துவிடுகிறது. இதுதான் நமக்கு நாமே சூனியம் வைத்து கொள்வது.

உங்கள் வியாபாரத்தின் பாரத்தை குறைப்பது எப்படி? 

                               "Share your hotspot" 

  • போனில் இருக்கும் Internet -னை Hotspot மூலம் மற்ற சாதனங்களுக்கு பயன்படுத்தலாம். 
  • நிறுவனத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் திறமைகளும் பகிரப்படும் போது அனைவருக்கும் நன்மை கிடைக்கிறது.



தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை பல நேரங்களில் நாம் தவிர்ப்பது உண்டு. ஆனால் நமக்கான வாய்ப்புகளை நம்முடைய தெரிந்த வட்டத்தை விட தெரியாத வட்டத்தில் தான் அதிகமாக இருக்கும். அமேசான் நிறுவனர் அவருடைய தெரிந்த நபர்களுக்கு மட்டும் விற்பனை செய்ய நினைத்திருந்தால் இப்போது இவ்வளவு உயரத்தை அடைய முடியாது, மக்களுக்கான திறந்த சேவையை அவர் வழங்கியதால் உலகின் முன்னணி நிறுவனமாக வளர்ந்துள்ளது. நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் தான் தேர்வு செய்கிறோம்.

உங்கள் வியாபாரத்தின் பாரத்தை குறைப்பது எப்படி? 

                            "Choose the call for Improvement" 

  • உங்களுக்கு வரும் அழைப்புகளை ஏற்பதும் தவிர்ப்பதும் உங்களுடைய விருப்பம். 
  • உங்கள் நிறுவனத்தை மேம்படுத்துவதும் நீங்கள் தேர்வு செய்யும் விருப்பத்தை பொருத்துதான்.

 

புதன், 25 ஜூன், 2025


 நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க! ஒரு நிறுவனத்தில் இந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள் எனில் இன்னும் வளர்ச்சியின் பாதையில் பயணிக்க நாம் தீர்மானிக்கவில்லை என்று பொருள். நிறுவனத்தின் பிரச்சனைகளில் அனைவரது பங்களிப்பிற்கும் வாய்ப்பளிக்கும் போது சவால்களை எளிதாக சந்திக்க முடியும்.

உங்கள் வியாபாரத்தின் பாரத்தை குறைப்பது எப்படி? 

                               "Use other available Sources"

  • சில நேரங்கள் நம்முடைய போனில் Internet வேகமாக இல்லை எனில் Wi-Fi பயன்படுத்துகிறோம். 
  • நம்முடைய நிறுவனத்திலும் நம்மை விட சிறப்பாக சிந்திக்க கூடியவர்கள் இருப்பார்கள், அவர்களை முறையாக பயன்படுத்தும் போது நம்முடைய வேகம் அதிகரிக்கும்.



 ஒரு நிறுவனத்தில் அனைத்தையும் உற்பத்தி செய்ய முடியாது, ஆனால் உற்பத்தி செய்யும் ஒரு பொருள் அல்லது வழங்கும் சேவைக்கு தேவையான மற்றவைகளை இணைந்து வழங்கும் போது நம்முடைய தனித்துவம் இன்னும் அதிகரிக்கிறது. சினிமா டிக்கெட் விலை 150 ருபாய் என்றால் இடைவேளையில் நாம் வாங்கும் தின்பண்டங்களின் விலை 300 முதல் 500 வரை ஆகிறது. படம் மட்டுமே போதும் என்று நினைத்திருந்தால் அந்த கூடுதல் இலாபத்தை அவர்களால் பெற முடியாது..

உங்கள் வியாபாரத்தின் பாரத்தை குறைப்பது எப்படி?

                                    "Combine your Services" 

  • பேசுவதற்காக மட்டுமே இல்லாமல் அனைத்து பருவத்தினைகளும் செய்ய முடியும். 
  • வியாபாரத்திலும் விற்பனை மற்றும் சேவைகளோடு இணைந்து மற்ற பிற வசதிகளையும் நவீனப்படுத்துங்கள்.



உங்களுக்கு சிறப்பாக வண்டி ஓட்ட தெரியும், நீங்கள் வெளியில் சென்றுவிட்டால் வண்டியை வீட்டில் நிறுத்தி வைக்கலாம். ஆனால் நிறுவனத்தை நிறுத்தி வைக்க முடியாதே.
சூழ்நிலைகள் எப்போது மாறும் என்று யாரும் தீர்மானிக்க முடியாது. எனவே அதற்கு முன்பே நம்முடைய வேலைகள் சரியாக நடக்கும் வகையில் அனைத்தையும் தயார் செய்வது அவசியம். அதற்கு சரியான நபர்களை தேர்வு செய்வது மிகவும் முக்கியம்.

உங்கள் வியாபாரத்தின் பாரத்தை குறைப்பது எப்படி? 

                        "Move Forward by making work Forward" 

  • ஒரு மொபைல் நம்பர் சரியாக இயங்காவிட்டால் மற்றொன்றுக்கு Call Forward செய்ய முடியும். 
  • நீங்கள் அருகில் இல்லாவிட்டாலும் வேலைகள் சரியாக நடக்கும் வகையில்  Work Forward செய்யுங்கள்.

 

செவ்வாய், 24 ஜூன், 2025


எப்போதும் நம்மிடம் இருப்பதை வைத்து மட்டுமே நாம் செயல் பட முடியாது. ஒவ்வொரு நாளும் நாம் நம்முடைய செயல்களை மேம்படுத்த வேண்டும். இதன் மூலம் நம்முடைய நேரம் சேமிக்கப்படுவதோடு பலன்களும் அதிகரிக்கும்.

உங்கள் வியாபாரத்தின் பாரத்தை குறைப்பது எப்படி? 

                                  "Update your team up to date" 

  • உங்களுடைய போனில் இருக்கும் Play store அனைத்தையும் Update செய்து பயன்படுத்த எளிமைப்படுத்தி விடுகிறது. 
  • நிறுவனத்தில் இருப்பவர்களையும் அப்படியே வைத்திருக்காமல் அவர்களையும் அவ்வப்பொழுது Update செய்து விடுங்கள்.

 


 சமூகத்தில் அனைவருடனும் நட்புறவுடன் இருக்க விரும்பும் நாம் நம்முடைய நிறுவனங்களில் அதை கையாள தவறிவிடுகிறோம். குறைகளை மட்டுமே காணாமல் அந்த குறைகளில் இருந்து அவர்களை வெளிக்கொண்டுவர நாம் உதவும் போது அவர்களும் நிறைவாக வாழ்வதுடன் நிறுவனமும் நிறைவாக இருக்கும்.


உங்கள் வியாபாரத்தின் பாரத்தை குறைப்பது எப்படி? 

                                                 "Always be with your Circle" 
  • தெரியாத நம்பரில் மிஸ்டு கால் வந்தால் உடனே அழைக்கும் நாம் நமக்கு  முக்கியமானவர்களின்  அழைப்புகளை கண்டுகொள்வதில்லை. 
  • நிறுவனத்தின் வெளியில் இருக்கும் மக்களுக்கு முக்கியத்துவம் தரும் நாம் நம் கூடவே பயணிக்கும் பணியாளர்களை மறந்து விடுகிறோம்.


 one at a Time!

இது நிறுவனத்தில் இருக்கும் அனைவர்க்கும் பொருந்தும். இதன் மூலம் தவறுகள் குறையும் மற்றும் தரம் அதிகரிக்கும் அதே சமயத்தில் ஒரு வேலையை கையில் எடுத்தால் அதனை முழுமை படுத்தாமல் அடுத்த வேலையை தொடங்குவதும் நம்முடைய வளர்ச்சியை பாதிக்கும்.

உங்கள் வியாபாரத்தின் பாரத்தை குறைப்பது எப்படி? 

                                                   "One at a Time" 
  • உங்கள் போன்ல எத்தனை Simcard பயன்படுத்தினாலும் ஒரே நேரத்தில் ஒன்றை தன் பயன்படுத்த முடியும். 
  • பல வேலைகள் இருந்தாலும் ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே செயல்படுத்துங்கள்


இதுதான் நம்முடைய நிறுவனத்தில் சிந்தித்து முடிவு செய்ய வேண்டிய இடம். ஒவ்வொன்றாக சரி செய்து, அனைத்தையும் உருவாக்கி, வளர்ச்சி அடையும் போது, அதன் கூடவே நிறுவனத்தின் தேவைகளும் அதிகமாகும். அப்படி அதிகமாகும் தேவைகளை மாற்று வழிகளில் பூர்த்தி செய்வதன் மூலம் உங்களுடைய செலவுகளை குறைத்து பணத்தை சிறப்பாக கையாள முடியும். கட்டமைப்பு என்பது விளம்பரம் அல்ல அது நமக்கான தேவை. தேவைக்கு அதனை நிறைவேற்றி நிறைவாக வளம் பெறுவோம்.

 உங்கள் வியாபாரத்தின் பாரத்தை குறைப்பது எப்படி?

                                      "Increase your Productivity" 

  • மொபைல் Memory குறைவாக இருந்தால் புது போன் வாங்க வேண்டாம், ஒரு மெமரி இருந்தால் போதும். 
  • உங்களுடைய நிறுவனத்தின் திறன்களை அதிகப்படுத்துவதன் மூலம் புதிய வாய்ப்புகளை பெற்று உற்பத்தியை எளிதாக அதிகப்படுத்தலாம்.


திங்கள், 23 ஜூன், 2025


 அப்படி நம்முடைய செயல்முறை, தொடர்பு, நம்முடைய முக்கியத்துவம் இவை அனைத்தும் முழுமையாக நம்முடைய வேலைகளில் இருக்கும் போது நமக்கான பாதுகாப்பான யுக்திகளை நாம் உருவாக்க முடியும். அதன் பிறகு அதனை முறையாக பாதுகாக்கும் போது வளர்ச்சி சூடுபிடிக்கிறது.

உங்கள் வியாபாரத்தின் பாரத்தை குறைப்பது எப்படி?  

                                    "Password for Your Business" 

  • உங்களுடைய Password உங்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும் போது உங்களுடைய தகவல் பாதுகாப்பாக இருக்கும். 
  • உங்களுக்கான தனித்துவத்தை நீங்கள் ஏற்படுத்தி உங்களுடைய கட்டுப்பாட்டில் அதை வைக்கும் போது வியாபாரமும் பாதுகாப்பாக இருக்கும்.



 உங்களுடைய வியாபாரத்தின் பாரத்தை

குறைப்பது எப்படி 3/15
நம்முடைய முறைகளும் சரியாக இருக்கிறது. நமக்கான தொடர்புகளும் சரியாக இருக்கிறது, இருந்தும் நம்மால் சிறப்பாக செயல்பட முடியவில்லை, எனில் இன்னும் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை, அல்லது நம்முடைய முக்கியத்துவம் வேறு இடத்தில் இருக்கிறது என்று பொருள். நம்முடைய ஆற்றலை சேமித்து தேவையான இடத்தில மட்டும் சரியாக வழங்கும் போதுதான் செய்யும் வேலைகநம்முடைய முறைகளும் சரியாக இருக்கிறது. நமக்கான தொடர்புகளும் சரியாக இருக்கிறது, இருந்தும் நம்மால் சிறப்பாக செயல்பட முடியவில்லை, எனில் இன்னும் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை, அல்லது நம்முடைய முக்கியத்துவம் வேறு இடத்தில் இருக்கிறது என்று பொருள். நம்முடைய ஆற்றலை சேமித்து தேவையான இடத்தில மட்டும் சரியாக வழங்கும் போதுதான் செய்யும் வேலைகள் முழுமை பெறுகிறது.

உங்கள் வியாபாரத்தின் பாரத்தை குறைப்பது எப்படி? 

                                              "Keep your Energy Full" 
  • எப்போதும் முழுமையான சார்ஜ் இருக்கிறதோ அப்போது உங்களால் விரும்பியவாறு பயன்படுத்த முடியும். 
  • நிறுவனத்தையும் எப்போதும் முழுமையாக சார்ஜ் செய்து வையுங்கள் அப்போதுதான் நம்மால் முழுமையாக செயல்பட முடியும்.


உங்களுடைய வியாபாரத்தின் பாரத்தை
குறைப்பது எப்படி 2/15

வியாபாரத்தில் நமக்கான தொடர்பு சரியாக இருக்குமானால் நம்முடைய செயல்முறைகளும் சரியாக இருக்கும். உங்களுடைய செயல்கள் சிறப்பாக அமைய முதலில் சரியான தொடர்புகளை மேற்கொள்ளுங்கள்.

உங்கள் வியாபாரத்தின் பாரத்தை குறிப்பது எப்படி? 

                                   "Change your Network"  

  • நீங்கள் இருக்கும் இடத்தில் சரியாக Connection கிடைக்கவில்லை என்றால் நெட்வொர்கினை மாற்றுங்கள். 
  • உங்கள் வியாபாரத்திலும் உங்களுக்கான வாய்ப்புகள் சரியாக கிடைக்க விட்டால் தொடர்புகளை மாற்றுங்கள்.

 


 உங்களுடைய வியாபாரத்தின் பாரத்தை

குறைப்பது எப்படி 1/15
நமக்கான செய்முறை என்பது தனித்துவம் ஆனது அதை மேம்படுத்தினால் நமக்கான வெற்றியும் தனித்துவமாக தெரியும்.

உங்கள் வியாபாரத்தின் பாரத்தை குறைப்பது எப்படி? 

                                             "Change your model, not your business"  
  • வியாபாரத்தின் மாடல் எப்படி இருக்கிறதோ அதற்கு ஏற்ப தான் அதன் Performance இருக்கும். 
  • Performance சரியாக இல்லை என்றால் வியாபாரத்தை மாற்ற வேண்டாம், உங்களுடைய முறையை மாற்றினால் போதும்.

ஞாயிறு, 22 ஜூன், 2025


 சுயதொழில் தொடங்கும் இளைஞர்களுக்கான 10 சவால்கள்.


சென்றவாரம் ஏற்கனவே தொழில் செய்யும் மூத்த தலைமுறையினர், தங்களது வாரிசுகளான அடுத்த தலைமுறைக்கு தொழில் நிர்வாகத்தை கொடுக்கும் போது சந்திக்கும் சவால்கள் பற்றி பார்த்தோம்.
அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் புதிதாக தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கான 10 சவால்கள் பற்றி பார்க்கலாம்..

1. மிக முக்கியமான சவால், எதற்காக இந்த தொழிலை தொடங்க வேண்டும் என்ற தெளிவும், கனவுகளும் இல்லாமல் இருப்பது.

2. சகமனிதர்களின் அனுபவங்களை ஆதாரமாக வைத்து மற்றவர்களை சார்ந்து சுய அனுபவம் இல்லாமல் தொழிலை தொடங்குவது.

3. சமுதாயத்தில் இப்போது தொடங்கும் தொழிலின்‌ தாக்கம் பற்றி அறியாமல் இருப்பது.

4. வாடிக்கையாளர்களின் தேவைகளை சரியாக ஆராயாமல் இருப்பது

5. மிக முக்கியமாக தங்களுக்கான வாடிக்கையாளர்களை கண்டறியாமல் பொத்தாம் பொதுவாக அனைவரையும் சார்ந்து இருப்பது.

6. திட்டமிடலில் ஒரு யதார்த்தமான மனபாங்கு, தன்னுடைய பலம், பலவீனம் பற்றியெல்லாம் ஆராயாமல் செயல்படுத்துவது.

7. தாங்கள் மேற்கொள்ளும் தொழிலின் அடிப்படை தன்மைகளையும், அதன் நன்மைகளையும், கொள்கைகள், கோட்பாடுகளையும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு முழுமையாகவும் முறையாகவும் வெளிப்படுத்தாமல் இருப்பது.

8. வெற்றிக்கு தன்னையும்‌ தோல்விக்கு மற்றவர்களையும் காரணம் காட்டுவது.

9. நேரத்தை சரியாக நிர்வகிக்காமல் இருப்பது.

10. மிக முக்கியமாக பணம்தான்‌ அனைத்திற்கும் முக்கியம் என்று நினைப்பது.

இது போன்ற மேற்கண்ட எந்த வகையான சவால்களை நீங்கள் சந்திந்தாலும் அதனை உடனே நிவர்த்தி செய்து வெற்றிகரமான தொழில் முனைவோராக மாறுங்கள்.


 "அ முதல் ஃ "வரையிலான தொழில் மேலாண்மை...

உங்கள் நிறுவனத்தின் "ஃ" என்ன!

ஓவ்வொரு நாளும்‌ நம் ஓவ்வொரு செயல்களும் முழுமை அடையும் போது உங்களது நிறுவனமும் முழுமையான வளர்ச்சியை பெறுகிறது. உயிர் எழுத்துக்களை போல உங்களது நிறுவனத்திற்கு தேவையான அத்தனை மேலாண்மை இரகசியங்களையும் செயல்படுத்தி சிறந்த அடையாளத்தை உருவாக்குங்கள்.

அ  முதல் ஔ வரை என செயல்முறைகளை நீங்கள் சிறப்பாக செய்துவிட்டால் உங்களுக்கான  'ஃ'  இதுதான்!
  • உங்களுக்கு உங்களைச் சார்ந்த பணியாளர்களுக்கும் உங்கள் நிறுவனம் சிறந்த அடையாளமாகும்.
  • வாடிக்கையாளர்கள் உங்களது நிறுவனத்தில் சேவைகளை பெறுவதை பெருமைக்குரிய அடையாளமாக கருதுவர்.
  • இந்த சமூகத்தில் சிறந்த பங்களிப்பை அளிக்கக்கூடிய இந்த சமூகத்தின் இன்றியமையாத அடையாளமாக உங்கள் நிறுவனம் மாறி இருக்கும்.


 "அ முதல் ஃ "வரையிலான தொழில் மேலாண்மை...

உங்கள் நிறுவனத்தின் "ஒள" என்ன!

வளர்ச்சி என்பது சிறந்த அடையாளத்தை பெறுவதும், அதனை தனித்துவத்தால் தக்கவைப்பதும் ஆகும். ஒரு நிறுவனத்தின் தலைவராக உங்களது அடையாளங்களின் பிரதிபளிப்புதான் உங்கள் நிறுவனம். உங்களுடைய பங்களிப்பினை மாற்றம் செய்யும் போது, உங்கள் நிறுவனத்தின் அடையாளமும் அதற்கு ஏற்ப வேறுபடுகிறது. 

உங்கள் தொழிலுக்கான 'ஒள' என்ன?
  • இதுவரை நீங்கள் பெற்ற வெற்றிகள் மற்றும் அனுபவங்களை உங்களுக்கான அடையாளமாக மாற்றுங்கள்.
  • இதுவரை நீங்கள் பெற்ற வெற்றிகள் மற்றும் அனுபவங்களை உங்களுக்கான அடையாளமாக மாற்றுங்கள்.

அடுத்த பதிவில் உங்கள் தொழிலுக்கான '' தெரிந்து கொள்ளலாம்.


"அ முதல் ஃ "வரையிலான தொழில் மேலாண்மை


உங்கள் நிறுவனத்தின் "ஓ" என்ன!

வரவுக்கும் செலவுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தில் தான் நம் நிறுவனத்தின் வளர்ச்சி இருக்கிறது. செயல்முறைகளை வித்தியாசப்படுத்தி அதனை சிறப்பாக மேம்படுத்தி செலவுகளை குறைக்கும் போது சிறப்பான முன்னேற்றத்தை அடைய முடியும்.  

உங்கள் தொழிலுக்கான 'ஓ' என்ன?

  • இப்போது சந்தையில் நீங்கள் நன்கு வளர்ச்சி அடைந்த நன்மதிப்பைப் பெற்ற நிறுவனமாக இருப்பீர்கள்.
  • இனி உங்களுடைய உற்பத்தி முறைகளை மேம்படுத்தி செலவுகள் கூட உங்களுக்கான இலாபமாக மாறக்கூடிய புதிய யுக்திகளை உருவாக்குங்கள்.

அடுத்த பதிவில் உங்கள் தொழிலுக்கான 'ஔ' வை தெரிந்து கொள்ளலாம்.



 "அ முதல் ஃ "வரையிலான தொழில் மேலாண்மை


உங்கள் நிறுவனத்தின் "ஒ" என்ன!
ஒரு நிறுவனத்தின் வெற்றிப்பாதையை தீர்மானம் செய்வதில் பரிணாம வளர்ச்சி என்பது முக்கியமானது. சமூகத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப நம் நிறுவனத்திலும், உற்பத்திலும், வழங்கும் சேவையிலும் ஏற்படுத்தும் மாற்றங்கள்தான் நம்முடைய முன்னேற்றத்தை சீராகவும் விரைவாகவும் அடையச்செய்யும்.

உங்கள் தொழிலுக்கான 'ஒ' என்ன?
  • இப்போது உங்களுடைய நிறுவனம் தொடக்கத்தை விட இப்போது நன்றாக விரிவடைந்து இருக்கும்.
  • இப்போது உங்கள் உற்பத்தி மற்றும் சேவைகளில் கவனம் செலுத்தி பல்வேறு வகையான இணைய பொருட்களை உருவாக்குங்கள்.

அடுத்த பதிவில் உங்கள் தொழிலுக்கான 'ஓ' வை தெரிந்து கொள்ளலாம்.


 "அ முதல் ஃ "வரையிலான தொழில் மேலாண்மை

தொடர்ந்து முன்னேற்றத்தில் பயணிக்கும் உங்கள் நிறுவனத்தில் "ஐ" என்ன!

குடும்பம் பெரிதாக பெரிதாக வீடு பெரிதாகிறது, அதை போலத்தான் உங்கள் நிறுவனம் வளர்ச்சி பாதையில் செல்லும் போது அதற்கான பிரத்யேக நிர்வாக அமைப்பையும் செயல்பாடுகளை அதிகரிக்கும் மனிதர்களையும், தகவல் பரிமாற்ற யுக்திகளையும், அமைக்க வேண்டியது அவசியம்.

உங்கள் தொழிலுக்கான 'ஐ' என்ன?
  • உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் வெற்றிகளுக்கு ஏற்ப நிர்வாகம் அமைப்பை மாற்றி அமையுங்கள். 
  • குறிப்பிட்ட வளர்ச்சி நிலைக்கு பிறகு உங்களது சிந்தனைகளை அதிகரித்து அவற்றை செயல்படுத்த தனித்துவம் வாய்ந்த மனிதர்களை அதில் அமர்த்துங்கள்.
  • வளர்ச்சிக்கு ஏற்ப உட்பிரிவுகளை தனித்தனியாக பிரித்து அதற்கான மேலாண்மை நிபுணர்களையும் பணியமர்த்துங்கள்.

அடுத்த பதிவில் உங்கள் தொழிலுக்கான 'ஒ' வை தெரிந்து கொள்ளலாம்.

சனி, 21 ஜூன், 2025


 இன்றைக்கு "ஏ" பற்றி பார்க்கலாம்.


இலக்குகளை தீர்மானித்த பிறகு அதற்கு ஏற்பட கூடும் தடைகளையும் கண்டறியவேண்டியது அவசியம். அப்படி கண்டறிந்து அதற்கான தீர்வுகளையும் தயார் செய்து கொண்டால் தொழில் முன்னேற்றம் சீராக இருக்கும். 

உங்கள் தொழிலுக்கான 'ஏ' என்ன?
  • சிறந்த கொள்கைகளோடும் சேர்ந்து சரியான திட்டமிடலுடன் கூடிய இலக்குகளை நிர்ணயம் செய்யுங்கள். 
  • உங்களுடைய இலக்குகளில் ஏதேனும் தடைகள் ஏற்பட்டால் இலக்குகளை மாற்றாமல் அதற்கான வழிமுறைகளை மாற்றி அமையுங்கள். 
அடுத்த பதிவில் உங்கள் தொழிலுக்கான 'ஐ' யை தெரிந்து கொள்ளலாம்.


 இன்றைக்கு "எ" பற்றி பார்க்கலாம்.


அ, ஆ, இ, ஈ,உ,ஊ

வழிமுறைகளில் உங்களுக்கான அடிப்படை நிர்வாகத்தை பெற்றிருப்பீர்கள், இப்போது நீங்கள் பெற்ற உருவாக்கிய நிர்வாகத்திறன்களை உங்களுடைய நிறுவனத்தின் ஒரு சிறந்த கொள்கையாக ஒரு கோட்பாடாக மாற்ற வேண்டும். நான்தானே இதற்கு முதலாளி நான் சொல்லுவதுதான் செயல்திட்டம் என்று சொன்னால் அது வெற்றி அடையாது. உதாரணமாக நீங்கள் மட்டும் பைக் ஒட்டுகிகொண்டு போகின்றீர்கள் என்றால் எப்படி வேண்டுமென்றாலும் பயணிக்கலாம். ஆனால் ஒரு பொதுமக்கள் இருக்கும் பேருந்தை அப்படி இயக்க முடியாது.

இங்குதான் மிக முக்கியமான புரிதல்கள் தேவை " ஒரு தனி மனிதனின் கொள்கைகள் சக மக்களோடும் சுற்றி இருக்கும் சமூகத்தோடும் ஒன்று சேர வேண்டும். அதற்கு உங்கள் நிறுவனத்தின் எதிர்கால பயணங்கள் பற்றி ஒரு தெளிவான செயல்திட்டங்கள் தேவை.

உங்கள் தொழிலுக்கான 'எ' என்ன?
  • உங்களுடைய கொள்கைகளை நேரம் மற்றும் காலநிலைக்கு ஏற்றவாறு மாற்றியமையுங்கள்.
  • வளர்ச்சிக்கு ஏற்றவாறு அடுத்தடுத்த உறுதியான இலக்குகளை நிர்ணயம் செய்யுங்கள்.
அடுத்த பதிவில் உங்கள் தொழிலுக்கான 'ஏ' வை தெரிந்து கொள்ளலாம்.

புதன், 18 ஜூன், 2025


இன்றைக்கு "ஊ" பற்றி பார்க்கலாம்.

அ, ஆ, இ, ஈ,உ, வழிமுறைகளில் உங்களது சுய முன்னேற்றம் சிறப்பாக அமைந்திருக்கும், அடுத்த கட்ட நகர்வான நமக்கான சமூகத்தை உருவாக்கும் நேரம் எனவே இப்போது நம் உடன் பயணிக்க விரும்பும் சக தொழில் வல்லுனர்களை தேர்வு செய்து அவர்களும்‌ வெற்றியடைய உதவுங்கள்.

உங்கள் தொழிலுக்கான 'ஊ' என்ன ?

  •  உங்களைப் போன்ற சிறந்த நிர்வாக திறன் உடையவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்துங்கள். 
  • அவர்களது தொழிலும் உங்களது தொழிலும் ஒன்றுக்கொன்று பயன்படக்கூடியதாக இருக்கட்டும்.
  • அவர்களுடைய கொள்கைகளும் கோட்பாடுகளும் உங்களுடைய நிறுவனத்திற்கும் உங்களுக்கும் ஒத்துப் போகக்கூடியதாக இருக்கட்டும்.
  • தொடர்ந்து மற்றவர்களுடைய முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருங்கள், அவர்களுக்கு வழிகாட்டுங்கள். 

அடுத்த பதிவில் உங்கள் தொழிலுக்கான எ வை தெரிந்துகொள்ளலாம்




 



இன்றைக்கு "உ" பற்றி பார்க்கலாம்.

அ, ஆ, இ, ஈ, படிநிலைகளை கடக்கும் போது உங்களுடைய‌ தொழிலின் அடிப்படை தேவையை உணர்ந்திருப்பீர்கள்.
இப்போது அதிகமாக மேலாண்மையில் கவனம் செலுத்துங்கள். சீராகவும் தொடர்ச்சியான முன்னேற்றத்தை தரும் வகையிலும் வகைப்படுத்துங்கள்.

உங்கள் தொழிலுக்கான 'உ' என்ன? 

  • உங்கள் நிறுவனத்தின் மேலாண்மையை சீராக பராமரியுங்கள்.
  • உங்களுடைய வளர்ச்சி சீரானதாகவும், தொடர் முன்னேற்றமாகவும்இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்த பதிவில் உங்கள் தொழிலுக்கான 'ஊ' வை தெரிந்து கொள்ளலாம்




 நிறுவனத்தின் கொள்கைகளை தீர்மானிப்பது அதன் வளர்ச்சியை தீர்மானிப்பதற்கு சமம். 

உங்கள் தொழிலுக்கான 'ஈ' என்ன? 

  •  உங்களது நிறுவனத்திற்கான சிறந்த கொள்கைகளை உருவாக்குங்கள்.
  • உங்களுடைய கொள்கைகள் தொழிலாளர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் இருக்கட்டும்.
  • மேலும் உங்களுடைய கொள்கைகள் வாடிக்கையாளரின் நன்மதிப்பை பெறுவதாக இருக்கட்டும்.
  • நிறுவனத்தின் உள்ளே ஆரோக்கியமான மனநிலையை உருவாக்குங்கள். 
  • நிறுவனத்தின் பணியாளர்களின் ஆரோக்கியமான மனோநிலைக்கு ஏற்ப வெளி உலகிலும் சிறந்த மதிப்பை பெறுவீர்கள்.

அடுத்த பதிவில் உங்கள் தொழிலுக்கான 'உ' வை தெரிந்து கொள்ளலாம்.



செவ்வாய், 17 ஜூன், 2025


 அடிப்படை கட்டமைப்பு எவ்வளவு அவசியமோ, அதே அளவு வளர்ச்சி மற்றும் காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப அதனை மேம்படுத்துவதும் அவசியம். மேலும் அந்த மாற்றங்களுக்கு ஏற்ப நிறுவனத்தின் உள்ளார்ந்த செயல்பாடுகளை சீராக வடிவமைத்து அதற்கு ஏற்ப பணியாளர்களையும் மேம்படுத்த வேண்டும்.

உங்கள் தொழிலுக்கான 'இ' என்ன?

  • தொழிலின் அடிப்படை கட்டமைப்பினை தொடர்ந்து மேம்படுத்துங்கள்.
  • தொழிலின் விரிவாக்கத்திற்கு ஏற்ப உட்கட்டமைப்பை எளிமையானதாகவும் அனைவரும் பங்களிக்கவும் வகையில் மாற்றுங்கள். 

அடுத்த பதிவில் உங்கள் தொழிலுக்கான 'ஈ' தெரிந்து கொள்ளலாம்

திங்கள், 16 ஜூன், 2025


 நிறுவனத்தின்‌ வளர்ச்சிக்கு அடிப்படை மிக முக்கியம் என்பதை அ வில் பார்த்தோம். இதன் பிறகு‌ பின்பற்ற வேண்டிய ஆ மிக முக்கியமானது. அதுதான் மாற்றுச்சிந்தனைகள். இந்த மாற்றுச்சிந்தனைகள் மூலம் தான் செயல்முறைகளை மாற்றியமைத்து நம் கட்டமைப்புகளை சீர் செய்ய முடியும். இதற்கான‌ அனைத்து ஆலோசனைகளையும் நீங்கள் நம் Elite Management Consulting Services மூலம் பெற முடியும்.

உங்கள் தொழிலுக்கான 'ஆ' என்ன?

  • வினை முறையாக செயல்படுத்துங்கள். 
  • அடிப்படையில் சிறந்த கட்டமைப்பினை உருவாக்கிய பின்பு எளிய மாற்றுச் சிந்தனைகளால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் சேவைகளை வழங்குங்கள்.

அடுத்த பதிவில் உங்கள் தொழிலுக்கான 'இ' தெரிந்து கொள்ளலாம்

ஞாயிறு, 15 ஜூன், 2025


 

ஒரு தொழிலின் கட்டமைப்பில் மேற்கொள்ள வேண்டிய படிநிலைகள் நம் மொழியில் உள்ள உயிரெழுத்து போன்றவை. இதில் முதல்‌‌ எழுத்தான "அ" உங்களுக்காக..

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும், சந்தேகங்களையும் அன்புடன் வரவேற்கிறோம்.

உங்கள் தொழிலுக்கான அ  என்ன? 

  • தொடங்க வேண்டிய இடத்தை சரியாக தீர்மானம் செய்யுங்கள்.
  • தொழிலை தொடங்கிய பின்பு அதற்கான ஏற்ற இறக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.
  • கற்றுக் கொண்ட விஷயங்களை வைத்து உங்கள் தொழிலை சமநிலைக்கு கொண்டு வாருங்கள்.
  • ஒரு சீரான பாதையை கண்டறிந்த பிறகு அந்த தொழிலின் படிப்படியான உயரத்தையும் உறுதியான கட்டமைப்பையும் உருவாக்கங்கள்.

வெள்ளி, 13 ஜூன், 2025


 விற்பனைக்கும் வாழ்விற்கும் ஒரு தொடர்பு உண்டு,


விற்பனை என்பது நிறுவனத்திற்கும் வாடிக்கையாளருக்கு இடையே ஏற்படும் பந்தம்.

ஒவ்வொரு வாடிக்கையாளரும் மன ரீதியாக முழுமையாக திருப்தி அடையும் பொழுது அவர் தொடர்ந்து வாடிக்கையாளராக பயணிக்கிறார்.

நமது போட்டியாளர்களின் சேவைகளை பற்றி வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ளும் போதும் அவை அனைத்தையும் விட நான் தேர்வு செய்தது சிறந்தது என்ற கர்வம் அல்லது அந்த பெருமையை தொடர்ந்து வாடிக்கையாளரின் மனதில் நிலைநிறுத்த வேண்டும். அப்போது விற்பனை எப்போதும் உச்சத்தில் இருக்கும்.

  • உங்களது நிறுவனம் அல்லது பிராண்ட் பற்றி அறிமுகத்தை பல்வேறு விதங்களில் தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும்.
  • நீங்கள் உங்களது வாடிக்கையாளர்களுக்காக வழங்கும் சேவைகளை தெளிவாக விளக்க வேண்டும்.
  • மற்றவர்களை விட எந்த விதத்தில் உங்களது நிறுவனம் சிறந்தது நீங்கள் வழங்கும் சேவைகளின் முக்கியத்துவத்தையும், அதனால் கிடைக்கும் நன்மைகளையும் கூற வேண்டும்.
  • நீங்கள் வாடிக்கையாளர்களை கையாளும் முறைகள் வரவேற்பது, தேவைகளை கேட்பது,விளக்கங்கள் கொடுப்பதும் தொடர்ந்து பின்பற்றுவது போன்றவற்றை நேர்மறையாக இருக்க வேண்டும்.
  • உங்களைத் தேடி வரும் வாடிக்கையாளருக்கு எந்த மாதிரியான மதிப்பினை கொடுக்கிறீர்கள் என்பது நேர்மறையாக நிறுவனத்தின் மதிப்பை உயர்த்தும்.
  • மேற்கண்ட அனைத்தையும் சரியாக செய்து விட்டால் வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவை என்பது தெளிவாக புரிந்துவிடும் அதனால் விற்பனை எளிதாகவும் அதிகமாகவும் நடைபெறும்.