Translate

புதன், 2 ஜூலை, 2025


 பல நாட்கள் யார் என்ன செய்கிறார்கள் என்பதை கண்டுகொள்ளாமல் பார்த்தும் பார்க்காமல் உங்களால் இருக்க முடியுமா ?


நிறுவனத்தில் மட்டும் எப்படி மற்றவர்களின் நிலையை கண்டும் காணாமல் போக முடிகிறது.

வியாபாரக்காதல் 

                         "Family members are not a Passengers"
  • அன்புக்குரியவர்கள் தற்காலிகமானவர்கள் அல்ல அவர்கள் பயணிகள் அல்ல, நம் குடும்ப உறுப்பினர்கள். 
  • நிறுவனத்தில் சிறிது காலத்திற்கு தற்காலிகமாக என்று கருதாமல் நீண்ட பயணத்திற்கு ஏற்ப மனிதர்களை கையாளும்போது சுமைகள் குறைகிறது.


முதல் முதலில் சைக்கிளை பழகும் குழந்தைக்கு தந்தையின் கைகள் உடன் இருக்கிறது என்ற நம்பிக்கை மிகப்பெரிய பலம். அதை போல சவால்களை சந்திக்க நாம் உடன் இருக்கிறோம் என்ற நம்பிக்கை உறுதியான பயணத்தை ஏற்படுத்தும்.

வியாபாரக்காதல் 

                                "Hold your Hand to Hold your Team" 

  • எந்த ஒரு சூழ்நிலையிலும் நான் இருக்கிறேன் என்று விரல் நீட்டும் போது புது உற்சாகம் பிறக்கிறது. 
  • நிறுவனத்திலும் கடினமான சூழ்நிலைகளில் நான் இருக்கிறேன் என்று உற்சாகத்தை கொடுக்கும் போது அது அனைவரையும் தொடர்ந்து இயங்கும்.

 


 என்னதான் மூடி மூடி‌ மறைத்தாலும் செய்த பின்பு அனைவருக்கும் தெரியத்தான் போகிறது. அதற்கு முன்பே அவர்களையும் அழைத்து ஒரு ஆலோசனைகளை கேட்டுவிட்டால் அதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் திருப்தி நாளை அவர்களாகவே பல பிரச்சனைகளுக்கு தீர்வுகள் வழங்க வழி வகுக்கும்.

வியாபாரக்காதல் 

                             "Thrive on Communication" 

  • அன்பிருக்கும் இடத்தில் அதிகாரத்தை விட அங்கீகாரமே உயர்ந்து இருக்கும், என்னிடம் எதுவும் சொல்வதே இல்லை என்பதே அவர்களுடைய பெரிய குறையாக இருக்கும். 
  • நிறுவனத்தில் சரியான முறையில் நடைமுறைகளை தெளிவுபடுத்தும் போது குழப்பங்கள் குறைகிறது.


செவ்வாய், 1 ஜூலை, 2025


 உங்களது அன்பிற்கு உரியவர்கள் ஏதேனும் ஒன்றில் பலவீனமாக இருந்தால் அதனை சரி செய்வீர்களா அல்லது அதனை குறைகூறி காயப்படுத்துவீர்களா ? நிறுவனத்திலும் அப்படித்தான் நமக்காக பணிபுரியக்கூடியவர்களை மெருகேற்றவேண்டியது நமது கடமை தானே!

வியாபாரக்காதல் 

              "Bring each other's Strengths to the Forefront" 
  • உண்மையான அன்பின் வெளிப்பாடு இருவர் இடையே உள்ள புரிதல்கள் தான். 
  • நிறுவனத்தில் திறமைகளை விட இயலாமையை புரிந்து கொள்வது மிக முக்கியம். அதற்கு ஏற்ப உதவிகளை வழங்கும் போது வெற்றி தொடர்கிறது.

எப்போதும் வேலை வேலை என்று ஒரே மன அழுத்தமாக இருக்கிறதா? எப்போதாவது நம்முடைய குழந்தைகளுடன் இருக்கும் போது நமக்கு மன அழுத்தம் ஏற்படுமா ?

குழந்தையின் வளர்ச்சியை பார்த்து பார்த்து பூரிப்பவர்தானே தந்தை ? நிறுவனமும் உங்களது குழந்தைதான், அது தானாக நடக்க பழகும் வரை நீங்கள் உடன் இருக்கவேண்டும். அதே சமயம் சுயமாக இயங்க ஆரம்பித்த பிறகு நீங்கள் கண்காணிக்க வேண்டுமே தவிர கட்டுபடுத்த கூடாது.

வியாபாரக்காதல் 

                         "Being with is a great Pleasure" 

  • அன்புக்குறிவுகளோடு கடக்கும் ஒவ்வொரு நொடியும் நமக்கு ஆனந்தமாகவே இருக்கும். 
  • உங்கள் நிறுவனத்தில் செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு சுமையாக தெரிந்தால் உடனடியாக உங்களது வழிமுறைகளை மாற்றுங்கள்.



 வெற்றியாளர்கள் தங்களை எப்போதும் எல்லாவற்றிலும் முன்னுதாரனமாக நிலைநிறுத்தியுள்ளனர். நாம் தான் நிர்வாகி என்பதற்காக நம்முடைய சுய விருப்பப்படி எப்போதும் நிறுவனத்தில் செயல்பட கூடாது.

ஒட்டுநருக்காக பேருந்து இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்..

வியாபாரக்காதல் 

         "Respect Your Commitment on Your Own Business" 
  • உங்களுடைய அன்பிற்கு உரியவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக காப்பாற்ற நினைப்பீர்கள். 
  • நாம் தான் உரிமையாளர் என்பதற்காக நாம் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறுவதோ அல்லது தாமதப்படுத்துவதோ கூடாது!